Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ரயிலில் கடத்தி வரப்பட்ட 8.700 கிலோ குட்காவை பறிமுதல் செய்த திருச்சி இருப்புப் பாதை காவல் நிலைய போலீசார் .

0

'- Advertisement -

Ad banner

இன்று ரயிலில் கடத்தி வரப்பட்ட 8.700 கிலோ குட்காவை பறிமுதல் செய்த திருச்சி இருப்புப் பாதை காவல் நிலைய போலீசார் .

இன்று செவ்வாய்க்கிழமை ( 01/09/26 தேதி ) சிறப்பு ரோந்து அலுவலாக சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் , போலீசார் கண்ணதாசன், ரெங்கபாஷ்யம், ராஜ்குமார் ஆகியோர்

விழுப்புரம் இரயில் நிலையத்தில் இருந்து திருச்சி வரை, ஹவுராவில் இருந்து திருச்சி வரை செல்லும் வண்டியில் , தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள கஞ்சா , குட்கா, போன்ற போதைப் பொருட்களை சோதனை செய்ததில் ஏசி பெட்டியில் ஒரு இருக்கைக்குக் அடியில் நீல நிற சாக்கு பை இருந்ததை சோதனை செய்ததில் அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா இருந்தன, அதை கொண்டு வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த முஹமது சகாதத் ஹீசைன் என்பவரின் மகன்,முஹமது தவ்ஸ்ஃப் (வயது 29) என்பவரை விசாரனை செய்ததில் அவர் ஹவுராவிலிருந்து மதுரை கொண்டு செல்வதற்காக குட்காவை கடத்தி வந்தது தெரிய வந்தது அதன் எடை 8.700 கிலோ கிராம் . பறிமுதல் செய்யப்பட்ட குட்கா மற்றும் முஹமது தவ்ஸ்ஃப் நிலையம் அழைத்து சென்று ஆஜர் படுத்தப்பட்டு உணவு பாதுகாப்பு அதிகாரி அன்புச்செல்வனிடம் ஒப்படைத்து பின்பு அவர்களால் ரூபாய் 25,000/- அபராதம் விதிக்கப்பட்டது ..

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.