Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

உறையூரில் 5 ஆண்டுகளாக மனைவியிடம் பேசாமல் வாழ்ந்த நபர் வீட்டில் பிணமாக கிடந்த சம்பவம்..

0

'- Advertisement -

Ad banner

திருச்சி உறையூரில் 5 ஆண்டுகளாக மனைவியிடம் பேசாமல் வாழ்ந்த நபர் வீட்டில் பிணமாக கிடந்த சம்பவம்..

உறையூர் காவல் நிலைய போலீசார் விசாரணை

திருச்சி உறையூர் ராமலிங்கம் நகர் 1 வது மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் அசோக் குமார் (வயது 52) இவருக்கு திருமணம் ஆகி பிரியதர்ஷினி என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர்.

இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக அசோக் குமார் கடந்த ஐந்து வருட காலமாக மனைவியிடம் பேசாமல் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம். மனைவி பிரியதர்ஷினிதா தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதற்கிடையில் வீட்டில் தனியாக இருந்த அசோக் குமார் அறையில் இறந்து கிடந்த ரர். பிறகு வீட்டுக்கு வந்து பார்த்த பிரியதர்ஷினி கணவர் அசோக்குமார் இறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக உறையூர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த உறையூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்த அசோக்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து உறையூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து அசோக் குமார் இறந்ததற்கான காரணம் என்ன? எப்படி அவர் இறந்தார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அசோக் குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் அவர் எப்படி இறந்தார் என்பது தெரிய வரும்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.