Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஸ்ரீரங்கத்தில் இரவில் நிறுத்தி இருந்த டூ வீலர் தீயில் எரிந்து நாசம் .

0

'- Advertisement -

Ad banner

ஸ்ரீரங்கத்தில் இரவில் நிறுத்தி இருந்த டூ வீலர் தீயில் எரிந்து நாசம் .

ஸ்ரீரங்கம் பஞ்சகரை ரோடு ஜெ ஜெ நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 50) இவர் நேற்று முன்தினம் இரவில் தனது வீட்டுக்கு வெளியே இருசக்கர வாகனத்தை நிறுத்தி இருந்தார்.

இந்நிலையில் நேற்று காலை வீட்டிற்கு வெளியே வந்து பார்த்த போது இரு சக்கர வாகனம் தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது ,உடனடியாக தீயை அணைக்க தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தார்,உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்க முயற்சி செய்தனர் ஆனால் அதற்கு முன் வாகனம் முழுவதும் சேதமாகி விட்டது. இந்த சம்பவம் குறித்து செந்தில்குமார் ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து சமூக விரோதிகள் யாராவது வாகனத்தை தீ வைத்து கொளுத்தினார்களா அல்லது விபத்தா ? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.