Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி கலெக்டர் அலுவலகம் வளாகம் அருகே அடையாளம் தெரியாத முதியவர் பிணம்…

0

'- Advertisement -

Ad banner

திருச்சி கலெக்டர் அலுவலகம் வளாகம் அருகே அடையாளம் தெரியாத முதியவர் பிணம்…

யார் அவர்? போலீசார் விசாரனை

திருச்சி பழைய கலெக்டர் அலுவலகம் சாலையில் டான்சி அலுவலக கேட் அருகில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக செசன்ஸ் கோர்ட் காவல் நிலையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து செசன்ஸ் கோர்ட் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்த முதியவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கோ அபிஷேகபுரம் கிராம நிர்வாக அலுவலர் சரவணன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் செசன்ஸ் கோர்ட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த முதியவர் யார் ? எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.