Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் ரெயில்வே பாதுகாப்பு படை ஓய்வு பெற்ற உதவி கமிஷனர் திடீர் சாவு .

0

'- Advertisement -

திருச்சியில் ரெயில்வே பாதுகாப்பு படை ஓய்வு பெற்ற உதவி  கமிஷனர் திடீர் சாவு .

Ad banner

திருச்சி முத்தரசநல்லூர் ஆதிநகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 70 ) இவர் ரயில்வே பாதுகாப்பு படை உதவி போலீஸ் கமிஷனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் .. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அவருக்கு பல் வலி ஏற்பட்டது அதைத் தொடர்ந்து நேற்று புத்தூர் மெயின் ரோட்டில் உள்ள ஒரு பல் மருத்துவரை பார்ப்பதற்காக சென்று உள்ளார்.

மருத்துவமனையில் காத்திருந்த அவரை நர்சுகள் அழைத்த போது அவர் இருக்கையிலேயே பேச்சு மூச்சு இல்லாமல் இருந்துள்ளார் .. இதனை தொடர்ந்து அந்த மருத்துவமனையில் உள்ளவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலமாக அவரை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்று உள்ளனர். அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதித்து விட்டு சந்திரசேகரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்து உள்ளனர். இது குறித்து அவரது மனைவி சந்தியா அளித்த புகாரின் அடிப்படையில் உறையூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.