Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி நீதிமன்றத்தில் 300 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்ட குறை கேட்கும் கூட்டம் .

0

'- Advertisement -

திருச்சி நீதிமன்றத்தில் 300 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்று சிறப்பாக நடைபெற்ற வழக்கறிஞர்கள் குறை கேட்கும் கூட்டம் .

Ad banner

திருச்சி முதன்மை மாவட்ட நீதிபதி மாண்புமிகு  M. கிறிஸ்டோபர் அவர்கள் தலைமையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள மாண்புமிகு நீதிபதிகள் முன்னிலையில் வழக்கறிஞர்கள் குறை கேட்கும் கூட்டம் மற்றும் 12/9/2026 அன்று இந்தியா முழுவதும் நடக்கவிருக்கும்தேசிய லோக் அதாரத் (national lok adalat ) சிறப்பாக நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது முதலில் மரியாதைக்குரிய மூத்த வழக்கறிஞர்கள், இளம் வழக்கறிஞர்கள், பெண் வழக்கறிஞர்கள் நீதிமன்ற நிர்வாகத்தை பற்றி தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர் . தலைமை குற்றவியல் நீதிபதி செந்தில் முரளி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்  பி. வி.வெங்கட் ஆகியோர் வரவேற்புரை வழங்கிய பிறகு நிர்வாகிகளும் வரவேற்புரை ஆற்றினர் நிகழ்ச்சியில் முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் சவரிமுத்து, ஜெயராமன் திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்க செயலாளர் ஆரோக்கியசாமி, துணைத் தலைவர் சுதா, இணைச் செயலாளர் ராஜா ரவிவர்மா, பொருளாளர் பிரதீப் குற்றவியல் வழக்கறிஞர் சங்க தலைவர் முல்லை சுரேஷ், துணைத் தலைவர்கள் சசிகுமார்,பிரபு செயலாளர் பி. வி. வெங்கட் மற்றும் 300-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர் .. நிகழ்ச்சி நிறைவில் நீதிபதி   பிரபு அவர்கள் நன்றி உரையாற்றினார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.