வருகின்ற இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் அ.தி.மு.க வெற்றியை பெற அயராது பாடுபடுவோம் .புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மனோகரன் தலைமையில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்

வருகின்ற இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் அ.தி.மு.க வெற்றியை பெற அயராது பாடுபடுவோம் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் .
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் திருவானைக்கோவிலில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது கூட்டத்திற்கு அமைப்புச் செயலாளர், முன்னாள் அரசு தலைமை கொறடா ஆர். மனோகரன் தலைமை தாங்கி பேசினார். மாவட்ட அவைத் தலைவர் சேவியர் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மாநில சிறுபான்மை நலப் பிரிவு துணை செயலாளர் புல்லட் ஜான், மாநில ஜெ. பேரவை துணைச் செயலாளர் ஜெயம் ஶ்ரீதர், மாநில விவசாய அணி துணை செயலாளர் பேரூர் கண்ணதாசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திரசேகர், சின்னச்சாமி, மாவட்ட நிர்வாகிகள் சிவகாமி, பொன்னுச்சாமி, கவிதா ஜெகதீசன் நெட்ஸ் இளங்கோ, ஜெயந்தி ஒன்றிய கழக செயலாளர்கள் கடிகை ராஜகோபால், கோப்பு நடராஜ், ஜெயக்குமார் முத்துக்கருப்பன், செல்வராஜ், சுந்தர்ராஜன் , டைமன் திருப்பதி ,சேது பொன்னுச் சாமி, பவுன் ராமமூர்த்தி திருமலை, சாமிநாதன், கண்ணுச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்
கூட்டத்தில் புதிய நிர்வாகிகளை நியமனச் செய்த பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வது.
உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடகஅரசு முயற்சிப்பதை தடுக்கவும், தஞ்சை டெல்டா மாவட்டத்தில் குறுவை சாகுபடி செய்ய தேவையான தண்ணீரை கர்நாடக அரசிடம் பெறத்தவறிய த.வெ.க அரசை கண்டிப்பது.
நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் பொதுமக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளான விவசாய கடன் தள்ளுபடி, மகளிர்க்கு மாதம் 2500 ஊக்கத்தொகை, வருடத்திற்கு 6 சிலிண்டர், படித்து வேலை இல்லா பட்டதாரி மாணவர்களுக்கு ரூபாய் 4000 உதவித்தொகை என பல வாக்குறுதிகளை பட்ஜெட்டில் அறிவிக்காமல் வாக்களித்த மக்களை ஏமாற்றிய த.வெ.க அரசை இந்தக் கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது..அதிமுக நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் அ.தி.மு.க வெற்றியை பெற அயராது பாடுபடுவோம் என இந்த கூட்டம் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது
கூட்டத்தில் மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் சாத்தனூர் வாசு, அழகர்சாமி கண்ணகி, பிரவீன் குமார் பாஸ்கரன், ஜார்ஜ் அருண் பிரசாத்,டாக்டர் தினேஷ், முருகன், சந்துரு,பிசி தமிழழகன், குணசேகரன், விஜயராஜ் சண்முக பிரபாகரன் தர்மராஜ் மற்றும் மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் திருவானைக்கோவில் பகுதி செயலாளர் டைமன் திருப்பதி நன்றி கூறினார்.

