Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அரியமங்கலத்தில் வாலிபரிடம் செல்போனை பறித்த ரவுடி கைது .

0

'- Advertisement -

Ad banner

திருச்சி அரியமங்கலத்தில் வாலிபரிடம் செல்போனை பறித்த ரவுடி கைது .

திருச்சி அரியமங்கலம் மேல அம்பிகாபரத்தை சேர்ந்தவர் அருள்பிரவீன் (வயது 19) இவர் நேற்று திடீர் நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த மேல கல்கண்டார் கோட்டை அய்யனார் கோவில் தெரு பகுதியை சேர்ந்த ரென்ஷ் (வயது 24) என்ற வாலிபர் அருள் பிரவீனிடம் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கி அவரின் செல்போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டார். இது தொடர்பாக அருள் பிரவீன் அரியமங்கலம் காவல் நிலைய போலீசாரிடம் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் அரியமங்கலம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அருள் பிரவீன்யிடம் செல்போனை திருடிய ரென்ஷ்யை கைது செய்துள்ளனர். ரெனேஷ் ரவுடி பட்டியலில் உள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.