Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் தனியார் பேருந்துகளின் போட்டா போட்டி. மதுபோதையில் இருந்தனரா ஓட்டுநர்கள்.உயிர் தப்பிய பயணிகள்

0

'- Advertisement -

Ad banner

திருச்சியில் தனியார் பேருந்துகளின் போட்டா போட்டி. மதுபோதையில் இருந்தனரா ஓட்டுநர்கள்.நூலிழையில் தப்பிய அரசு பஸ் பயணிகள்.திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு சம்பவம்.

பொதுமக்கள் ஆவேசம் -கடும் போக்குவரத்து நெரிசல்

திருச்சி– மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்துகளின் அராஜக போட்டியால், அரசு பேருந்து ஒன்று பெரும் விபத்தில் இருந்து நூலிழையில் தப்பியுள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

 

ஈரோட்டிலிருந்து பஞ்சப்பூர் நோக்கி வந்த அரசு பேருந்தை, இடதுபுறமாக வந்த ஒரு தனியார் பேருந்து உரசுவது போல் முந்திச் செல்ல முயன்றது.

விபத்தைத் தவிர்க்க அரசு பேருந்து ஓட்டுநர் வாகனத்தை வலதுபுறம் திருப்பியபோது, அங்கு சென்ற மற்றொரு தனியார் பேருந்தின் பின்புற கண்ணாடியில் லேசாக மோதி நின்றது. இதில் அரசு பேருந்தின் சைட் மிரர்கள் உடைந்தன.

அதிர்ச்சியடைந்த பயணிகள் அச்சத்துடன் இறங்கி, போட்டி போட்டு இயக்கிய தனியார் பேருந்து ஓட்டுநர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பேருந்துகள் குறுக்கே நிறுத்தப்பட்டு இருந்ததால் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது. தகவலறிந்து விரைந்து வந்த போலீஸார், போக்குவரத்தை சீரமைத்தனர்.

திருச்சி மாநகரில் மேலப்புதூர் அருகே கடந்த மாதம் போட்டி போட்டு வந்த தனியார் பேருந்து ஓட்டுநரை போக்குவரத்து காவலர்கள் சோதனை செய்தபோது அவர் மது போதையில் இருந்தது தெரிய வந்தது.போக்குவரத்து காவலர்கள் காவல் நிலையம் அழைத்து சென்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது . இதுபோன்று இன்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மது போதையில் இருந்தார்களா என தெரியவில்லை

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.