திருச்சி பொன்மலை அருகே போலீஸ் அதிகாரி போல நடித்து அரிவாள் வெட்டு விழுந்த வாலிபரிடம் உளவு பார்த்த வாலிபர்

திருச்சி பொன்மலை அருகே போலீஸ் அதிகாரி போல நடித்து அரிவாள் வெட்டு விழுந்த வாலிபரிடம் உளவு பார்த்த வாலிபர் பிடிபட்டார்.
திருச்சி கொட்டப்பட்டு மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் ( வயது 33 )இவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு நான்கு பேர் கும்பல் அரிவாளால் வெட்டியது. பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இரண்டு தினங்களுக்கு முன்பு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இது தொடர்பாக பொன்மலை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து நான்கு பேரை கைது செய்தனர். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த நாகராஜிடம், தன்னை சிறப்பு போலீஸ் அதிகாரி என அறிமுகம் செய்து கொண்டு ஒரு வாலிபர் வீட்டுக்குச் சென்று பேசியுள்ளார். போலீஸ் போல தோற்றம் அளித்ததால் முதலில் நம்பிய அவர் பின்னர் அவரது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டு பொன்மலை காவல் நிலைய போலீசாரிடம் தகவல் கொடுத்தார். உடனே போலீசார் விரைந்து சென்று அந்த நபரை பிடித்து விசாரித்த போது, அரிவாள் விட்டு விழுந்த நாகராஜ் எதிர்த்தாக்குதல் தொடுக்க திட்டமிட்டுள்ளார என்பதை அறிவதற்கு போலீஸ் அதிகாரி போல நடித்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து ரகசிய இடத்தில் வைத்து அந்த நபரிடம் பொன்மலை போலீசார் விசாரணை நடந்து வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

