பள்ளி மாணவியுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை காட்டி தொடர் பாலியல் தொல்லை அளித்த உடற்கல்வி ஆசிரியர்
திருவாரூர் அருகே பெரும்புகலூர் கிராமத்தில் வசித்து வருபவர் வாஞ்சிநாதன் (வயது 48). திருவாரூர் அருகே தனியார் பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 15ம் தேதி இரவு 9 மணி அளவில் பணி முடிந்து மத்திய பல்கலைக்கழகம் சாலை வழியாக பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தபோது மற்றொரு பைக்கில் ஹெல்மெட் போட்டு வந்த அடையாளம் தெரியாத 2 பேர், திடீரென வாஞ்சிநாதன் முகத்தில் ஆசிட்டை வீசி விட்டு தப்பி சென்று விட்டார்கள் எனக் கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர், திருவாரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக வாஞ்சிநாதன் அளித்த புகாரின் பேரில் குடவாசல் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ஆசிட் வீசப்பட்ட சம்பவத்திற்கு உடற்கல்வி ஆசிரியர் வாஞ்சிநாதனின் பாலியல் தொல்லை காரணமாக இருக்குமா என விசாரணை நடத்தப்பட்டது. வாஞ்சிநாதன், அதே பள்ளியில் படித்த மாணவி ஒருவரை விளையாட்டு பயிற்சிக்காக வெளியூர் அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். பள்ளி படிப்பை முடித்து அந்த மாணவியும் கல்லூரி சென்று விட்டார். அப்போது மாணவியுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை எடுத்து வைத்த தற்போது வரை வீடியோவை காட்டி மாணவியை தொடர்ந்து மிரட்டி அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததும் தெரிய வந்துள்ளது. இதனால் இந்த சம்பவத்தினால் தான் உடற்கல்வி ஆசிரியர் மீது ஆசிட் வீசப்பட்டதா என்ற கோணத்திலும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தில் தலைமறைவான 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினால் உண்மை தெரிய வரக்கூடும் என்று கூறியுள்ளனர்.

