Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பிராட்டியூர் மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனையில் கணக்கில் வராத பணம் சிக்கியது ?

0

'- Advertisement -

திருச்சி பிராட்டியூர்

Ad banner

மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

கணக்கில் வராத  லட்சக்கணக்கான பணம் சிக்கியது?

தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அரசு வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் திடீர் சோதனை நடத்தினர்.

அந்த வகையில் திருச்சி பிராட்டியூரில் அமைந்துள்ள மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை துணை

போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இன்று மதியம் 12 30 மணி அளவில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்குள் சென்ற லஞ்ச ஒழிப்பு துறையினர் கதவுகளை உள்பக்கமாக அடைத்துக் கொண்டு சோதனை மேற்கொண்டனர். இதனால் போக்குவரத்து அலுவலக பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

சோதனையின் போது வெளி ஆட்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. அரை மணி நேரம் நடந்த இந்த சோதனையில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் நடத்தப்படும் விசாரணையில் கணக்கில் வராத பணம் லஞ்சப்பணம் என்பது உறுதி செய்யப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

திருச்சி பிராட்டியூர் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் திடீரென்று லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தியது அங்குள்ள ஊழியர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.