திருச்சி மேற்கு தொகுதியில் வாக்களித்த வெளிநாட்டு குடியுரிமை வைத்துள்ள திருச்சியை சோந்த 2 பேர் மீது வழக்கு.
சட்டமன்றத் தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில் வாக்களித்த வெளிநாட்டு குடியுரிமை வைத்துள்ள திருச்சியை சோந்த 2 பேர் மீது வழக்குப் பதிவு .
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் நடவடிக்கை
திருச்சி பொன் நகர் புது செல்வா நகரை சேர்ந்தவர் சால்மன் பார்ஷ் (வயது37)
இவர் கடந்த 17 ந் தேதி வெளிநாடு பயணம் மேற்கொள்ள சென்னை சர்வதேச விமான நிலையம் சென்றார். அங்கு அவரது உடமைகளை குடியேற்ற பிரிவு அலுவலர்கள் சோதனை செய்த போது அவர் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில் தனது வாக்கை செலுத்தியது தெரியவந்தது.
மேலும் அவர் வெளிநாட்டில் குடியுரிமை வைத்துள்ளவர் என்பதும் தெரிவந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சென்னை பெருநகர போலீசார் வழக்கு பதியவில்லை இது சம்பந்தமாக திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலைய போலீசார் சால்மன் பார்ஷ் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ்வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல திருச்சி தில்லை நகர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சனி வைத்தீஸ்வரன் (வயது 59)
கடந்த பத்தாம் தேதி வெளிநாடு செல்ல சென்னை விமான நிலையம் சென்றார்.அங்கு குடியேற்ற பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் அவர் வெளிநாட்டு குடியுரிமை வைத்துள்ளதும் அவர் திருச்சி தில்லைநகர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் தனது வாக்கை செலுத்தியதும் தெரியவந்தது.
இதுகுறித்து குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் தில்லைநகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

