திருச்சியில் இன்று தமிழக வெற்றி கழகம் சார்பில் மழை காலத்தில் நீர்மோர் பந்தலை தொடங்கி வைத்த கு.ப. கிருஷ்ணன்.
திருச்சியில் இன்று தமிழக வெற்றி கழகம் சார்பில் மழை தொடங்கிய பின்

நீர்மோர் பந்தலை தொடங்கி வைத்த கு.ப. கிருஷ்ணன்.
தமிழக வெற்றி கழகம் மற்றும் திருச்சிராப்பள்ளி நில குத்தகை வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில்
யானை பம்பு பகுதியில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயின் பிறந்த நாளான வருகிற 22- ம் தேதி வரை நடைபெறும்
நீர் மோர் பந்தல் திறப்பு விழா இன்று புதன்கிழமை காலையில் நடைபெற்றது.
விழாவில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவர் கு.ப. கிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு
பழங்கள் மற்றும் குளிர்பானங்கள் வழங்கினார்.
தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக கடும் வெயில் அடித்து வந்தது அதனை முன்னிட்டு பல்வேறு இடங்களில் இலவசம் முழு பந்தல் அமைக்கப்பட்டு குளிர்பானங்கள், மோர் வழங்கி பொதுமக்கள் பெரும் பயனடைந்து வந்தனர்.எப்பொழுதும் போல் திருச்சி ஐயப்பன் கோயிலில் கோடை காலத்தை முன்னிட்டு இரண்டு மாதம் நீர்மோர் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வழங்கப்பட்டது. ஜூன் 1 ம் தேதி முதல் வெயில் குறைந்து மழை தொடங்கியதால் (கடந்த இரண்டு மூன்று நாட்களாக திருச்சி நல்ல மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது) அனைத்து இடங்களிலும் நீர் மோர் பந்தல் மூடப்பட்ட நிலையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று பேரளவில் இந்த நீர்மோர் பந்தல் தொடங்கப்பட்டுள்ளது,இதனால யாருக்கு பயன் என அப்பகுதியில் உள்ளவர்கள் பார்த்து சிரித்தபடி சென்றனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் குப கிருஷ்ணன் உள்பட அனைவரும் முன்னாள் அதிமுக நிர்வாகிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

