Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கருமண்டபம் பத்மநாதன் ஏற்பாட்டில் நகை அடகு பிடிப்போர்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் கந்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் கு.ப.கிருஷ்ணன் முன்னிலையில் தவெக வில் இணைந்தனர்.

0

'- Advertisement -

வியாபாரிகளின் உரிமைகளை காக்க தமிழக வெற்றி கழகத்தில் இணைகிறோம்

Ad banner

நகை அடகு பிடிப்போர்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் கந்தன் பேட்டி

டெல்டா மண்டல ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சரும், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவருமான கு.ப .கிருஷ்ணன் முன்னிலையில் திருச்சி அதிமுக முன்னாள் மாவட்ட துணை செயலாளரும் தற்போதைய தமிழக வெற்றிக்கழக நிர்வாகியுமான கருமண்டபம் பத்மநாதன் ஏற்பாட்டில்

தமிழ்நாடு நகை அடகு பிடிப்போர்கள் கூட்டமைப்பு சங்கத்தின் மாநில தலைவரும் திருச்சி மாவட்ட சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத்தின் தலைவருமான எஸ். கந்தன் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் இன்று

தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

வியாபாரிகளின் உரிமைகளைக் காக்கவும், தமிழகத்தின் எதிர்காலத்தை வளர்க்கவும் தவெக-வோடு கரம்கோர்க்கிறது தமிழ்நாடு அடகு பிடிப்போர் சங்கம் என்று எஸ். கந்தன் கூறினார்..

தமிழ்நாடு நகை அடகு பிடிப்போர்கள் கூட்டமைப்பு சங்க செயல் தலைவர் எஸ்.ஆர்.வி. கண்ணன்,  பொதுச் செயலாளர் எஸ் .வி .அன்பழகன்  பொருளாளர் அம்பாள் என்.பி ஸ்ரீ ராம்குமார், மாநில சட்ட ஆலோசகர் ஜி.ஆரோக்கியசாமி, மாநிலத் துணைத் தலைவர்கள் ஆர். தியாகராஜன், பி.கார்த்திக் , கொள்கை பரப்புச் செயலாளர மணமேடு பிரபாகரன்,

மாநில இணை செயலாளர் லயன். கமலக்கண்ணன், துணைத் தலைவர் ஸ்ரீதர் (எ) முத்து வெங்கடாசலம், இணைச் செயலாளர் முசிறி என்.பாண்டியன் திருச்சி மாவட்ட தலைவர் மணப்பாறை எம்.ராஜேந்திரன், கொள்கை பரப்பு இணைச் செயலாளர் என். ராமன், துணைத் தலைவர் விராலிமலை ஆர் கோபால ககிருஷ்ணன்,  திருச்சி மாவட்ட செயலாளர் சோமரசம்பேட்டை வி.பரமசிவம், திருச்சி மாவட்ட பொருளாளர் சமயபுரம் எஸ்.அருள்செல்வம், இளைஞரணி தலைவர்பி. ராஜ் விமல், செயலாளர் எஸ்.கேசவன், பொருளாளர்ஆர். அருண் பாலாஜி,மற்றும் மாநில, மாவட்ட, தாலுக்கா நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். அதே போல் திருச்சி மாவட்ட சுமை தூக்கும் தொழிலாளர் சங்க செயலாளர் எஸ். சரவணன், பொருளாளர் எஸ். சதீஷ்குமார், துணைத்தலைவர் எம். ராஜா, இணைச் செயலாளர் பி.கார்த்திக், ஆலோசகர் கே. ரெங்கராஜன் ஆகியோரும் கருமண்டபம் பத்மநாதர் தலைமையில் தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.