Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அரசு சட்டக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழாவில் நீதிபதி கிறிஸ்டோபர் சிறப்புரை .

0

'- Advertisement -

திருச்சி அரசு சட்டக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழாவில் மாவட்ட முதன்மை நீதிபதி கிறிஸ்டோபர் சிறப்புரை .

Ad banner

திருச்சி அரசு சட்டக் கல்லூரியில் 1989-94 கல்வி ஆண்டில் இளங்கலை சட்டக் கல்வி பயின்ற முன்னாள் வகுப்பு தோழர்கள் கூடுகை நிகழ்வு திருச்சியில் நடைபெற்றது.

32 வது ஆண்டாக இந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

அப்போதைய முன்னாள் மாணவரும் திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதியுமான கிறிஸ்டோபர் தலைமை தாங்கினார். த.வெ.க. வழக்கறிஞர் ஆர். ஜான் ரஸ்கின், விடுதலை சிறுத்தைகள் கட்சி அருள், வழக்கறிஞர்கள் சென்னை அருண்குமார், கோவை ராஜேஷ் கண்ணா ,சென்னை வாசுதேவன் ,தஞ்சை செந்தில் ,திருவாரூர் தாரணி ,சென்னை பெனாசீர், தஞ்சை விஜயலட்சுமி  மற்றும் பலர் கலந்து கொண்டு தங்கள் கடந்த கால பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

இதில் நீதிபதி கிறிஸ்டோபர் பேசும் போது, வருடா வருடம் நாம் மட்டும் சந்திக்கின்றோம். அடுத்த முறை இது குடும்ப சந்திப்பு நிகழ்வாக அமைய வேண்டும். நம்முடைய நடப்பு உறவுகளை அடுத்த தலைமுறைக்கும் கடத்திச் சென்று உறவை மேம்படுத்த வேண்டும் என்றார். பின்னர் கலகலப்பான உரையாடல்கள், அறுசுவை விருந்து உடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

முடிவில் திருச்சி அரசு சட்டக் கல்லூரியில் நடந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழாவில்

மாவட்ட முதன்மை நீதிபதி கிறிஸ்டோபர் தனது முன்னாள் வகுப்பு தோழர்களுடன் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.