திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை துறைகளுக்கான கால்பந்து போட்டி (25.05.26) இன்று திங்கட்கிழமை காலை தொடங்கியது.

அதில் டீசல்,வேகன், எலக்ட்ரிக்கல் போன்ற 8 பிரிவில் பணிமனை அணிகள் உள்ளது. தொடக்க நாளில் இன்று காலை முதலில் எலக்ட்ரிக்கல் மற்றும் வேகன்அணிகள் முதல் போட்டியில் விளையாட்டினார்கள். அதனையடுத்து தொடக்கவிழாவை பொன்மலை ரயில்வே முதன்மை பணிமனை மேலாளர் சந்தோஷ்குமார் பட்ரோ தொடங்கி வைத்தார்.
பணிமனையின் உயர் அதிகாரிகள், தொழிலாளர்கள் கலந்துகொண்ட விளையாட்டு வீரர்களை வாழ்த்தினார்கள்.

