திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளராக முன்னாள் அரசு தலைமை கொறடா ஆர். மனோகரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

மனோகரன் அவர்கள் 8.04.1956 ல் பிறந்த இவர் 1980 ம் ஆண்டு முதல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிறப்பாக பணியாற்றி வருகிறார்.
1986 ல் ஸ்ரீரங்கம் நகர மன்ற உறுப்பினர்,நகர கூட்டுறவு வங்கி இயக்குனர் ,ஸ்ரீரங்கம் ஜெ. பிரிவு வட்ட செயலாளர்,
92 முதல் ஜெ.பேரவை மாவட்ட செயலாளர் 96 ல் 4 வது மாமன்ற உறுப்பினர்,
2001 ல் ஸ்ரீரங்கம் கோட்டத் தலைவர் (மண்டல குழு தலைவர்)மற்றும் மாவட்ட இணை செயலாளர்,
2006 ல் திருச்சி மாநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர்,
2009 ல் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் மற்றும் பாராளுமன்ற பொறுப்பாளர் பதவிகளை வைத்துள்ளார்-
மேலும் 2009 ல் ஜெயலலிதா தலைமையில் ஆகஸ்ட் 14 திருச்சி ஜி கார்னரில் திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.
2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் அம்மா அவர்களின் ஆசி பெற்ற வேட்பாளராக போட்டியிட்டு சுமார் 21,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர்.
28.2.2013 அன்று தமிழ்நாடு அரசு சட்டமன்ற தலைமை கொறடாவாக அம்மா அவர்களால் நியமிக்கப்பட்டார்.
2013ல் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக சிறப்பாக பணியாற்றினார்.
2016 திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளராக நின்று வெற்றி வாய்ப்பை இழந்தார்.
2023 அதிமுக பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் கழக அமைப்புச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.
நூற்றுக்கணக்கான கட்சி பொதுக் கூட்டங்கள் நடத்தியது. அம்மா அவர்கள் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட அதிமுக சார்பில் மனுச் செய்யக்கூடிய அரிய வாய்ப்பை
2011 திருச்சியில் அம்மா அவர்களின் திருக்கரத்தால் தேர்தல் அறிக்கை வெளியிட அதனைப் பெறும் பொன்னான வாய்ப்பு மனோகரனுக்கு கிடைத்தது.
திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் சிறப்பாக பணியாற்றிய மனோகரன் தற்போது திருச்சி தெற்கு மாவட்ட செயலாளராக சிறப்பாக பணியாற்ற திருச்சி அதிமுக நிர்வாகிகள் எடத்தெரு எம்.கே. குமார் உள்ளிட்ட அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

