Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் நாளை சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை

0

'- Advertisement -

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் நாளை சித்திரை தேரோட்டம்

Ad banner

உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில்

ஆண்டு தோறும் சித்திரை மாதத் தில் விருப்பன் திருநாள் எனப்படும் தேர்த்திரு விழா 10 நாட்கள் விமரி சையாக நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான விழா கடந்த 6 ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலையில் நம் பெருமாள் புறப்பாடும், திருவரங்கத்தின் சுற்றுப்பகுதிகளில் மண்டகப்படிக ளும், இரவு வாகன புறப்பாடுகளும், திருவீதி ஈரம் உலாக்களும் நடந்து வந்தன.

8ம் திருநாளான ங்க இன்று (13ம் தேதி) இரவு தங்கக்குதிரை வாகனத்தில் நம்பெருமாள் வீதியுலாவும், கோரத மூலை யில் வையாளியும் நடை பெறுகிறது.

இந்த உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (14ந்தேதி) காலை நடக்கவுள்ளது. இதற்கென உற்சவர் நம் பெருமாள் அதிகாலை 4 மணியளவில் மூலஸ் தானத்திலிருந்து புறப்பட்டு 4.30 மணியளவில் சித்திரை தேர் ஆஸ்தான மண்டபம் சேருகிறார்.

தொடர்ந்து 4.45 முதல் 5 மணிக்குள் மேஷ லக்னத்தில் தேர்த்தட்டில் எழுந்தருள்கிறார். பெருமாளுக்கு திருவாராதனங்கள் நடைபெறும்.

பின்னர் காலை 6 மணியளவில் உள்ளூர் பிரமுகர்கள் முன்னிலை யில் திருத்தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டது.

தேரோட்ட விழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம், மாந கராட்சி நிர்வாகம் கோயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேரோட்டத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறி விக்கப்பட்டுள்ளது. மேலும் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் பட்டுள்ளன.

இதற்கான ஏற்பாடுகளை ரெங்கநா தர்கோயில் நிர்வாக அதிகாரியும், இணை ஆணையருமான சிவராம்குமார் தலைமையில் அர்ச்சகர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் செய்துள்ளனர்.

நாளை மறுநாள்(15 ந்தேதி) இரவு சப்தாவர ணத்தை தொடர்ந்து திருவிழாவுக்கென ஏற்றப்பட்ட கொடியிறக்கப் படுகிறது. வருகிற

16ந்தேதி இரவு ஆளும்பல்லக்கு உலாவுடன் சித்திரைத்தேர் உற்சவ நிகழ்ச்சிகள் நிறைவு பெறுகிறது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.