திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மே தின கொடியேற்று விழா.

திருச்சி மாநகர மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பு.
திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ. சீனிவாசன் தலைமையில் இன்று நடைபெற்றது.
இதில் கல்லுக்குழி பகுதியில் ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கழக கொடியேற்றி இனிப்புகள் வழங்கியும், இரயில்வே குட்ஷெட் பாரம் சுமக்கும் தொழிலாளர்கள் சார்பாக அதிமுக கொடியேற்றி இனிப்புகள் வழங்கியும் இ.பி.ரோடு- கருவாட்டுப்பேட்டை அருகே அண்ணா தொழிற்சங்கம் தொழிலாளர்கள் சார்பில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கியும், இ.பி.ரோடு அருகே உள்ள மினி வேன் ஓட்டுநர்கள் சங்கம் சார்பாக கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கியும் மே. தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.
கழக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் முன்னிலை வகித்தார்,
இந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளர் வெல்லமண்டி ஜவஹர்லால் நேரு,
அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள்,திருச்சி மாநகராட்சி அதிமுக தலைவர் கோ.குஅம்பிகாபதி,மாநில பீடி பிரிவு செயலாளர் சகாப்தின்,மண்டல டாஸ்மாக் தொழிற்சங்க செயலாளர் செந்தில்குமார்,டாஸ்மாக் பிளாட்டோ, பகுதி செயலாளர் வாசுதேவன்,கலீல் ரகுமான்,வெங்கட் பிரபு,பொதுக்குழு உறுப்பினர் மல்லிகா செல்வராஜ்,
வட்டச் செயலாளர்கள் கல்லுக்குழி முருகன்,,சுந்தரவடிவேல், ,கருவாட்டுப்பேட்டை முருகன்,ராஜரத்தினம்,சின்னப்பன், மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள்,தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

