திருச்சி ஏர்போர்ட் அருகே கணவனைப் பிரிந்து வாழ்ந்த இளம் மனைவி மாயம்.

ஏர்போர்ட் பகுதியை சேர்ந்தவர் மரியா வேளாங்கண்ணி (வயது 25) இவரது கணவன் பெயர் ரிச்சர்டு. திருமணமாகி ஆறு வருடம் ஆகிறது.குழந்தை இல்லை. ரிச்சர்டு மது பழக்கத்திற்கு அடிமையாக இருந்த காரணத்தால் தனது கணவரை விட்டு பிரிந்து தாய் வீட்டில் மரிய வேளாங்கண்ணி வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 15 ந் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற மரிய வேளாங்கண்ணி மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது தாய் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடு என பல இடங்களில் தேடி பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தாய் டெய்சி ஏர்போர்ட் காவல் நிலைய போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் ஏர்போர்ட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மரிய வேளாங்கண்ணியை தேடி வருகின்றனர்.

