திருச்சி எடமலைப்பட்டி புதூரில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் .

யார் அவர் போலீசார் விசாரணை .
திருச்சி எடமலைப்பட்டி புதூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பஞ்சப்பூர் சோலார் பேனல் பின்புறம் உள்ள வயல்வெளியில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் அழகிய நிலையில் இறந்த கிடந்தார்.இறந்து கிடந்த முதியவர் யார் ? எந்த ஊரை சேர்ந்தவர் ?என்ற முழு விவரம் தெரியவில்லை.
தகவல் அறிந்து எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அழகிய நிலையில் கிடந்த முதியவர் உடலை மீட்டு திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த முதியவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

