அம்பேத்கரின் 135 வது பிறந்தநாள் : திருவெறும்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் குமார் மாலை அணிவித்து மரியாதை,
சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135 வது பிறந்தநாளை முன்னிட்டு

திருச்சி பெல் ட்ரைனிங் சென்டரில் உள்ள அண்ணல் அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்வில் தெற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ராஜ மணிகண்டன்,பகுதி செயலாளர்கள் பாலசுப்ரமணியன், பாஸ்கர், அண்ணா தொழில் சங்கம் கார்த்தி, பொதுக்குழு உறுப்பினர் சாந்தி, நிர்வாகி தெய்வ மணிகண்டன் மற்றும் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட மாவட்ட கழக, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் மற்றும் அதிமுக அனைத்து நிலைகளில் உள்ள நிர்வாகிகளும் திரளாக பங்கேற்றனர்.

