திருச்சி திருவெறும்பூர் தொகுதி வேட்பாளர் குமாரிடம் அதிமுகவுக்கு தான் எங்கள் வாக்கு என பொதுமக்கள் உறுதி கூறினர்
அ.இ.அ.தி.மு.க தலைமையிலான

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், போட்டியிடும் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர்,தெற்கு மாவட்ட செயலாளர்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் இன்று 4.04.2026 சனிக்கிழமை காட்டூர் பகுதி வட்டம் 37 க்கு உட்பட்ட அம்மன் குளம், மோதிலால் நகர், நேருஜி நகர், அரியமங்கலம் உள்பகுதி, SIT, கணபதி நகர், மணிஷ் காட்டேஜ், காமராஜ் நகர், மாரியம்மன் கோவில் ராஜவீதி, அப்துல்லா தெரு பகுதிகளில் ஒவ்வொரு வீடாக சென்று அதிமுகவின் சாதனைகளையும் தற்போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளையும் எடுத்துக் கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.வாக்கு சேகரிக்க வந்த அதிமுக வேட்பாளர் குமாருக்கு அப்பகுதி பொதுமக்கள் பெரும் வரவேற்பு அளித்து அதிமுகவுக்கு தான் எங்கள் வாக்கு என உறுதி அளித்தனர்.
பிரச்சாரத்தின் போது பகுதி செயலாளர்கள் முருகானந்தம், பாஸ்கர், பாலசுப்ரமணியன், அரியமங்கலம் தண்டபாணி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சாந்தி,மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ராஜ மணிகண்டன், அண்ணா தொழிற்சங்கம் கார்த்தி, வட்ட செயலாளர்கள் அனுசுயா ரவிசங்கர்,சந்திரசேகர் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், தமிழ் மாநில காங்கிரஸ் குணா, பாஜக சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

