Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் இன்று போதை ஊசியால் 2வது சாவு. காந்தி மார்க்கெட் அருகே போதை ஊசி செலுத்திக் கொண்ட இளைஞர் பொது கழிப்பறையில் சடலமாக மீட்பு .

0

'- Advertisement -

திருச்சி காந்தி மார்க்கெட் அருகே போதை ஊசி செலுத்திக் கொண்ட இளைஞர் பொது கழிப்பறையில் சடலமாக மீட்பு .

Ad banner

திருச்சி காந்தி மார்க்கெட் அருகே போதை ஊசி செலுத்திக் கொண்ட 22 வயது இளைஞர் உயிரிழந்தார்.

TVK ad

திருச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள கல்மந்தை காலனியைச் சேர்ந்த இளைஞர் ராஜமாணிக்கம். (வயது 22) இளைஞரான இவர் இன்று காலை அந்த பகுதியில் உள்ள பொது கழிப்பறையில் உயிரிழந்து கிடந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது ராஜமாணிக்கம் சடலமாக கிடந்தார். தொடர்ந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அருகில் இருந்த போதை ஊசியையும் பறிமுதல் செய்தனர்.

 

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் போதை ஊசி செலுத்தி கொண்ட போது தான் ராஜமாணிக்கம் உயிரிழந்தது தெரிய வந்தது. தொடர்ந்து காந்தி மார்க்கெட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே திருச்சியில் போதை ஊசி செலுத்தி இளம்பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் உயிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை கட்டுப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.