திருச்சி மேற்கு தொகுதியில் உள்ள பல்வேறு மக்கள் பிரச்சனைகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு
திருச்சி மேற்கு தொகுதியில் உள்ள பல்வேறு மக்கள் பிரச்சனைகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு
தென்னூர்:
வார்டு எண் – 28 அண்ணாநகர், காமராஜ் நகர்,காவல்காரர் தெரு,வெள்ளாளத்தெரு, பார்க் வியூ ஸ்ட்ரீட், தென்னூர் பாலம் சர்வீஸ் சாலைகள் இருபுறமும் உள்ளிட்ட சாலைகள் மிக மோசமாகவும் மற்றும் குண்டும்,குழியுமாக இருப்பதனால் மக்கள் சிரமத்தைக் கருத்தில் கொண்டும் மற்றும் விபத்துக்கள் எதும் ஏற்படாத வண்ணம் அதனை சரிசெய்யக்கோரியும்,தென்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்களை ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரக் கோரியும் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் மனு கொடுக்கப்பட்டது
உறையூர் :
வார்டு எண்.8,9 முஸ்லீம் தெருவில் உள்ள குடிநீர்த் தொட்டி (சின்டெக்ஸ் டேங்க்) பல வருடங்களாக பழுதடைந்த நிலையில் உள்ளது என்பதால் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் புதிய தொட்டி அமைத்துத் தரக்கோரியும் மற்றும் வார்டு 8,9 -ல் உள்ள சாக்கடைகளை சுத்தம் செய்து தரக்கோரியும், முஸ்லீம் தெரு,செட்டித் தெருவில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் மக்கள் சிரமத்தைக் கருத்தில் கொண்டும் மற்றும் விபத்துக்கள் எதும் ஏற்படாத வண்ணம் அதை சரிசெய்து தரக்கோரியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
பாண்டமங்கலம்:

மாரியம்மன் கோவில் அருகில் அரசால் நூலகம் கட்ட ஒதுக்கப்பட்ட இடத்தை தனிநபர் ஆக்கிரமித்திருப்பதை அகற்றிடக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.
கருமண்டபம்:
பொன்னகர், நியூ செல்வாநகர், விநாயகர் கோவில் தெரு உள்ளிட்டப் பகுதியில் உள்ள குண்டும் குழியுமாக உள்ளதால் மக்கள் சிரமத்தைக் கருத்தில் கொண்டும் மற்றும் விபத்துக்கள் எதும் ஏற்படாத வண்ணம் அதனை சரிசெய்யக்கோரியும், அப்பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்களை தூர்வாரக் கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.
மத்தியப் பேருந்து நிலையம் :
மத்தியப் பேருந்து நிலையம், மேஜர் சரவணன் சாலை, TTC பழைய பேருந்து நிலையம், மிளகுபாறை சாலை உள்ளிட்ட சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் மக்கள் சிரமத்தைக் கருத்தில் கொண்டும் மற்றும் விபத்துக்கள் எதும் ஏற்படாத வண்ணம் அதனை சரிசெய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.
திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் பிரச்சனைகள் சம்பந்தமாக இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் CPI(M) மேற்கு பகுதி செயலாளர் M.I.ரபீக் அஹமது தலைமையில் மனு கொடுக்கப்பட்டது.இதில் பகுதிக்குழு உறுப்பினர்கள் ஆசிக் அலி,வேதநாயகம் மற்றும் கிளை செயலாளர்கள் விஜய், இருதயராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

