Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பஞ்சப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில், கால் டாக்ஸி ஸ்டாண்ட் அமைப்பதற்குத் தனியாக இடம் ஒதுக்கித் தர வேண்டும்.சிஐடியு கால் டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கத்தின் சிறப்பு பேரவை கூட்டத்தில் தீர்மானம்.

0

'- Advertisement -

பஞ்சப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில், கால் டாக்ஸி ஸ்டாண்ட் அமைப்பதற்குத் தனியாக இடம் ஒதுக்கித் தர வேண்டும்.சிஐடியு கால் டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கத்தின் சிறப்பு பேரவை கூட்டத்தில் தீர்மானம்.

 

Ad banner

திருச்சி வெண்மணி இல்லத்தில் சிஐடியு கால் டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கத்தின் சிறப்பு பேரவை கூட்டம் இன்று (30.6 . 2026) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

​கூட்டத்திற்கு சாலைப் போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். மாவட்டப் பொருளாளர் ஆண்டனி சுரேஷ் வாழ்த்துரை வழங்கினார். மாநிலக் குழுவின் முடிவுகள் குறித்து மாவட்டச் செயலாளர் சந்திரன் விரிவாக எடுத்துரைத்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் மணிமாறன் சிறப்புரையாற்றினார்.

​ கூட்டத்தில்

TVK ad

​புதிதாக அமைக்கப்பட்டுள்ள பஞ்சப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில், கால் டாக்ஸி ஸ்டாண்ட் அமைப்பதற்குத் தனியாக இடம் ஒதுக்கித் தர வேண்டும்.

​ கால் டாக்ஸிகளுக்கான மீட்டர் கட்டணத்தைத் தமிழக அரசே முறைப்படி நிர்ணயம் செய்ய வேண்டும்.

​கால் டாக்ஸி கட்டண முறைகளில் ‘பிரிபெய்ட்’ (Prepaid) முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.

​ பொதுமக்களையும் தொழிலாளர்களையும் பாதிக்கும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

​என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக தலைவராக மாயவன், செயலாளராக குணசேகரன், பொருளாளராக பிரகாஷ், துணை நிர்வாகிகளாக உமர் பரூக், கார்த்திக், ஜெயமுருகன், கஜேந்திரன், சம்பத், ஜாய்ஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். முடிவில் தலைவர் மாயவன் நன்றி கூறினார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.