Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் கணக்கில் காட்டிய சொத்து மதிப்பு மட்டும் ஆயிரம் கோடிக்கு மேல்.அதிபரின் மனைவி,மகன், மருமகன் 3 பேரும் வெவ்வேறு கட்சி சார்பாக போட்டியிடுவது மக்கள் பணியாற்றவா? சொத்துகளை பாதுகாக்க வா ?

0

'- Advertisement -

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் காமராஜர் நகர், நெல்லித்தோப்பு என இரு தொகுதிகளில் போட்டியிடும் லட்சிய ஜனநாயகக் கட்சித் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.இவர் பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஆவார்.

Ad banner

இவர் தாக்கல் செய்துள்ளார் அவரது சொத்து மதிப்பு முழு விவரம்: ஜோஸ் சார்லஸ் மார்டின் கையிருப்பாக ரூ.20.59 லட்சமும் அவரது மனைவி சிந்து ஸ்ரீசார்லஸிடம் ரூ.1.82 லட்சமும் உள்ளது. கார்களில் ரூ.66.15 லட்சம் மதிப்புள்ள பென்ஸ் காரும், ரூ.1.29 கோடியிலான டொயோட்டோ வெல்பயர் கார் ஆகியவை உள்ளன.

ஜோஸ் சார்லஸிடம் ரூ.25.67 கோடி மதிப்பிலான 17 ஆயிரத்து 525 கிராம் தங்கமும், ரூ. 44.87 கோடி மதிப்பிலான 1950.353 கேரட் வைரங்களும், ரூ. 3.77 கோடியிலான 134.98 கிலோ வெள்ளியும், ரூ.38. 53 கோடி வாட்சுகளும், ரூ.1.57 லட்சம் முத்துகளும் உள்ளன. மேலும் டிடிஎஸ் உரிமைக் கோரலில் ரூ. 1.95 கோடி வந்துள்ளன. அவரது மனைவியிடம் ரூ.5.35 கோடி மதிப்பிலான 3655 கிராம் தங்கமும், ரூ. 2.10 கோடி மதிப்பிலான 485.5 கேரட் வைரங்களும், ரூ. 1.68 கோடி மதிப்பிலான 60 கிலோ வெள்ளியும், ரூ.1.14 கோடி வாட்சுகளும் உள்ளன.

ஜோஸ் சார்லஸிடம் விவசாயம் அல்லாத நிலம் ரூ.192 கோடி மதிப்பில் உள்ளது. அவரது மனைவியிடம் ரூ. 60 லட்சம் மதிப்பிலும் உள்ளன. குடியிருப்பு கட்டடங்கள் ரூ.269 கோடி மதிப்பில் உள்ளன. அவரது மனைவியிடம் ரூ.60 லட்சம் மதிப்பில் உள்ளது. சொத்தில் ரூ.19.45 கோடி கடனும், கார் லோன் ரூ.1.28 கோடியும், கிரெடிட் கார்டு லோன் உள்ளூர் வங்கியில் ரூ.5.91 லட்சமும், வெளிநாட்டு வங்கியில் ரூ. 1.03 கோடியும் உள்ளன.

 

கடந்த நிதியாண்டில் ஜோஸ் சார்லசுக்கு ரூ.59.37 கோடி வருவாயும், அவரது மனைவிக்கு ரூ.16.63 லட்சம் வருவாயும் வந்தது. அசையும் சொத்துக்கள் ஜோஸ் சார்லஸிடம் ரூ.328 கோடியும், மனைவியிடம் ரூ.10.61 கோடியும் உள்ளன. மேலும் அசையா சொத்துகள் ஜோஸ் சார்லஸிடம் சொந்தமாக வாங்கியது ரூ.102 கோடி அளவிலும், பரம்பரையாக வந்தது ரூ.167 கோடியும் உள்ளது. அவரது மனைவியிடம் 60 லட்சம் அளவிலும் உள்ளனர். கடன்கள் மொத்தமாக ரூ. 210 கோடி அளவில் உள்ளன.

 

பல்வேறு வங்கி டெபாசிட்டுகளில் ரூ. 200 கோடி அளவில் உள்ளன. அவரது மனைவி பெயரில்ரூ. 3.43 லட்சம் டெபாசிட்டுகள் உள்ளன. ஜோஸ் சார்லஸ் ஷேர்களில் ரூ.14.28 கோடி அளவுக்கு முதலீடு செய்துள்ளார். அவரது மனைவி ரூ.3.6 லட்சம் மதிப்புள்ள ஷேர்களில் முதலீடு செய்துள்ளார். ஜோஸ் சார்லஸ் அட்வான்ஸ் வாங்கிய வகையில் ரூ.195 கோடி அளவுக்கு அவரது மனைவிக்கு ரூ.24.2 லட்சமாகவும் உள்ளது.

 

சிசி:

 

1. சட்ட விரோத நிதிகளை பிணையற்ற கடன்கள் எனக் காட்டும் பேலன்ஸ் ஷீட்டில் கையெழுத்திட்டு குற்றச்செயல் மூலம் ஈட்டப்பட்ட வருவாயை சொத்துக்களை வாங்கியதாக அமலாக்க இயக்குநரகத்தால் தொடரப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. என்ஐஏ எர்ணாகுளம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

 

2. பணமோசடி சட்டவிரோதப் பணத்தை ஈட்டுதல், அப்பணத்தை அசையா சொத்துக்களில் முதலீடு செய்தல் தொடர்பாக வழக்கு டெல்லி மேல்முறையீடு தீர்ப்பாயத்தில் முறையிடப்பட்டுள்ளது.

3. மேற்கு வங்கத்தில் லாட்டரி சீட்டுகள் தொடர்பான குற்றவியல் வழக்குகள் 3 நிலுவையில் உள்ளது.

லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் காட்டியுள்ள கணக்கில் கூறியுள்ள தகவல் மட்டும் ரூ.1000 கோடி என்றால் ….

தற்போது மார்ட்டின் அதிபர் மனைவி லால்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார்.இவர் எத்தனை ஆயிரம் கோடி கணக்கு காட்டுவார் என தெரியவில்லை.

தற்போது மார்ட்டின் அதிபர் மனைவி லீமா ரோஸ் அதிமுக சார்பாகவும்,மகன் புதிய கட்சி தொடங்கி அதன் சார்பாகவும் (புதுச்சேரியில்),

மருமகன் ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றிக் கழகம் சார்பிலும் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

பணத்தை தண்ணீராக செலவழித்து ஒவ்வொரு கட்சியிலும் போட்டியிட்டு வெற்றி பெறுவது மக்கள் பணி ஆற்றுவதற்காகவா ? அல்லது லாட்டரி மூலம் முறைகேடாக சேர்த்த பல லட்சம் கோடி பணத்தை பாதுகாப்பதற்காகவா? விரைவில் விடை தெரியும்….

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.