அதிமுக 127 தொகுதிகளில் வெற்றி பெறும்.கருத்துக்கணிப்பில் தகவல்.மாவட்ட செயலாளர்கள் பத்திரிகையாளர்களை மதிக்காவிட்டால் தொகுதிகள் எண்ணிக்கை குறையும்.
தேர்தல் இயங்கும் நேரத்தில் பல நிறுவனங்களும் அமைப்புகளும் கருத்துக்கணிப்பு வெளியிடுவது வழக்கம்.
இதற்கு முன்பும் சில கருத்துக்கணிப்புகள் வெளியானது.. அதில், லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய் முதலமைச்சர் ஆவார். தவெக அதிக வாக்குகளை பெறும் என சொன்னார்கள்.. ஆனால் அது முழுக்க முழுக்க விஜய்க்கு ஆதரவான இயக்கம் என்பதால் அதை நம்ப தேவையில்லை என நெட்டிசன்களும், அரசியல் விமர்சகர்களும் கூறினார்கள்.
சில கருத்துக்கணிப்புகள் திமுக முதலிடத்தையும், தவெக இரண்டாவது இடத்தையும், அதிமுக மூன்றாவது இடத்தையும் பிடிக்கும் என சொன்னார்கள்.
இந்நிலையில் தான், Matriz என்கிற நிறுவனம் கருத்துக்கணிப்பு முடிவை வெளியிட்டிருக்கிறது.. அதன்படி திமுக கூட்டணி 104 முதல் 114 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும், அதிமுக 114 முதல் 127 தொகுதிகளில் வெற்றி பெறும், விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 6 முதல் 12 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் மற்றவை 6 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் தெரிவித்கப்பட்டிருக்கிறது.
மேலும், அதிமுக 39 முதல் 40 சதவீத வாக்குகளையும், திமுக 37 முதல் 38 சதவீத வாக்குகளையும், தவெக 14 முதல் 15 சதவீத வாக்குகளையும் மற்ற கட்சிகள் 10 முதல் 12 சதவீத வாக்குகளையும் வாங்கும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதைப்பார்க்கும் போது ஆட்சியை பிடிக்க அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக தலைமையிலான கூட்டணி முந்தைய தேர்தல் வாங்கிய வாக்குவங்கியை தக்க வைத்தால் மட்டுமே போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல வாக்களர்களின் பிரதான பிரச்சனை என்ன என்கிற கேள்விக்கும் பதில் கிடைத்திருக்கிறது.
பெண்களின் பாதுகாப்பு – 17.8%
சட்டம் ஒழுங்கு – 17.3%
மது மற்றும் போதை – 16.9%
வேலையிண்மை பிரச்சனை – 15.5%
ஊழல் 7.2%
வளர்ச்சியின்மை – 5.2
விலைவாசி உயர்வு – 5.2
மொழி திணிப்பு – 4.4
ஜனநாயக அமைப்புக்கான ஆபத்து – 4.1%
என மக்கள் பதிலளித்துள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல தற்போதைய எம்எல்ஏ மீண்டும் போட்டியிட்டால் அவருக்கு வாக்களிப்பீர்களாக என்கிற கேள்விக்கு
நிச்சயமாக என – 35.9% மக்களும்
நிச்சயமாக வாய்ப்பில்லை என – 28.7% மக்களும்
வாய்ப்பில்லை என – 18.7% மக்களும்
சொல்வதற்கில்லை என – 11.1% மக்களும்
ஒருவேளை வாக்களிக்கலாம் என – 5.6% மக்களும் பதிலளித்துள்ளனர்.

சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக பொதுச் செயலாளர் மீண்டும் தமிழக முதல்வராக மாவட்ட செயலாளர்கள் பத்திரிக்கையாளர்களை மதிக்க வேண்டும்.மாவட்ட செயலாளர்கள் செயல்பாடு குறித்து செய்தி வெளியிடும் பத்திரிகையாளர்கள் மீது வழக்கு பதிவது. (திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி ) பத்திரிகையாளர்களிடம் எந்த ஒரு தகவலும் தெரிவிக்காமல் நிகழ்ச்சியை நடத்துவது (திருச்சி மாநகர செயலாளர் ஜெ.சீனிவாசன்) என பத்திரிக்கையாளர்களை தொடர்ந்து தேர்தல் நேரத்திலும் மதிக்காவிட்டால் அதிமுகவுக்கு பின்னடைவு தான்.இதனால் திருச்சி போன்ற மாவட்டங்களில் அதிமுகவுக்கு தோல்விதான்.

