தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத்தலைவர் எஸ். கந்தன் தவெகவில் இணைந்ததால் நீக்கம்,மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத்தலைவர் எஸ். கந்தன் தவெகவில் இணைந்ததால் நீக்கம்,மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு அறிக்கை

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில துணைத்தலைவராக இருந்து வந்த எஸ். கந்தன் தான் வகித்து வந்த மாநில துணைத்தலைவர் பொறுப்பில் இருந்தும்,உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகிக் கொள்வதாக அளித்த கடிதத்தை பேரமைப்பு ஏற்றுக்கொண்டு மேற்கண்ட பொறுப்புகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு முழுக்க முழுக்க வணிகர் நலன் சார்ந்த அமைப்பாகும் ஜாதி மத அரசியல் எல்லைகளைக் கடந்து வணிகர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் பணியில் பேரமைப்பு நீடித்த மற்றும் நிலைத்த தன்மையுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது இத்தகைய சிறப்புமிக்க வணிகர் சங்கங்களின் பேரமைப்பிற்கு மாற்றாக தமிழக வெற்றி கழகம் சார்பில் புதிய சங்கத்தை துவங்கப் போவதாக வரும் செய்திகளின் காரணமாக பேரமைப்பின் அனைத்து நிர்வாகிகளும் அவருடன் எத்தகைய தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

