Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகர அதிமுகவில் பெரிய வெற்று இடத்தை ஏற்படுத்தி உள்ள பகுதி செயலாளர் சிந்தை முத்துக்குமார்

0

'- Advertisement -

Ad banner

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் ஜோசப் விஜய் தலைமையில் தமிழக வெற்றி கழகம் அபார வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்த அதிமுக மூன்றாவது இடத்தை பிடித்தது,இதற்கு காரணம் அதிமுக தலைமை சரியில்லை என கூறப்பட்டு வரும் நிலையில் அதிமுக கட்சியில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் என மலரும் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து வந்தனர்.

 

இந்த நிலையில் இன்று திருச்சி மணலூர் மாவட்ட மலைக்கோட்டை வடக்கு பகுதி செயலாளர் சிந்தை முத்துக்குமார் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனை சந்தித்து தனது ஆதரவாளர்களுடன் தமிழக வெற்றி கழகத்தில் இணைத்துக் கொண்டார்.

திருச்சி மாநகர அதிமுகவில் சிறந்த செயல்பாடு கொண்ட பகுதி செயலாளர் முத்துக்குமார் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தது அதிமுகவில் பெரிய வெற்று இடத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிந்தை முத்துக்குமார் தமிழக வெற்றி கழகத்தின் தன்னை இணைத்துக் கொண்ட நிகழ்வில் வெல்ல மண்டி ஜவகர் லால் நேரு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.