Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

2026 சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிமுக சார்பில் புதியவர், துடிப்பான இளைஞருக்கு வாய்ப்பு அளித்தால் …..

0

'- Advertisement -

2026 சட்டமன்றத் தேர்தல் ஸ்ரீரங்கம் தொகுதியில் யாருக்கு வாய்ப்பு…

 

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒன்பது தொகுதிகளில் அமைதியான அழகான தொகுதி எது என்றால் அது ஸ்ரீரங்கம் தான். பெருக்கெடுத்து ஓடும் காவேரி ஆறு, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர். நீர்தலமான திருவானைக்காவல், வண்ணத்து பூச்சி பூங்கா, முக்கொம்பு என பல அழகிய சிறப்பம்சங்கள் நிறைந்த தொகுதி தான் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி.

 

நெல், வாழை, பூ மற்றும் காய்கறிகள் தான் இந்த தொகுதி பெரும்பான்மையான மக்களின் ஜீவாதராமாக விளங்குகிறது. முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா இந்த தொகுதியில் நின்று ஜெயித்த பிறகுதான் இந்த தொகுதி பல வகைகளிலும் முன்னேறியது.

இந்த தொகுதியில் உடையார் முத்தரையர்கள், பிராமணர்கள், , யாதவர், வன்னியர் பட்டியல் சமுகத்தினர் என்று பலதரப்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்.

 

இந்த தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் திமுகவை சேர்ந்த எம்.பி.பழனியாண்டி.

 

தொகுதியில் இவர் மீது பெரிய அதிருப்தி இல்லை என்றாலும் அவர் அளித்த தேர்தல் வாக்குறுதியில் உள்ள ஸ்ரீரங்கம் அடிமனை பிரச்சனையை தீர்க்காதது. நெல் தானியம் சேமித்து வைக்க குடோவுன்கள் கட்டாதது. பூக்கள் அதிகம் விளைவதால் வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்காதது என்று பல குற்றச்சாட்டுக்கள் எம்.எல்.ஏ பழனியாண்டி மீது உண்டு. ஆனாலும் அடாவடி அரசியலில் ஈடுபடாதவர் என்பதால் மீண்டும் இவர் நின்றால் ஆச்சர்யம் இல்லை. ஆனால் ஒரு முறை அமைச்சர் கே என். நேருக்கு அவர் மட்டுமே தான் சம்பாத்தியம் வேண்டும் என தேசிய ஆடியோ வெளியானதால் அமைச்சர் நேரு அவர் மீண்டும் பரிந்துரை செய்வாரா என்பது சந்தேகம்தான். அடுத்ததாக திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாநிலத் துணை அமைப்பாளர்,ஜெயலலிதாவிடம் போட்டியிட்டு தோல்வியடைந்த ஆனந்த் அமைச்சர் நேருவை நம்பி தீவிர கட்சி பணியாற்றி ? வருவருக்கு வாய்ப்பு கிடைக்குமா?

 

அதேபோல் மத்திய மாவட்ட பொருளாளர் துரைராஜும் சீட் ரேசில் இருக்கிறார். இவர் அமைச்சர் நேருவின் நிழலாக எங்கு போனாலும் சென்று கொண்டிருப்பதால், தனக்குத்தான் ஸ்ரீரங்கம் தொகுதி என்றும், அப்படி இல்லாமல் பெண் வேட்பாளர் என்றால் என் மனைவியை தான் நிற்கவைப்பேன் என்று உறுதியாக சொல்லி வருகிறாராம்.

 

கடந்த ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் தன் சொந்த ஊரில் நின்றால் தோற்றுவிடுவோம் என்று பக்கத்து ஊரான போசம்பட்டியில் மாறி நின்று வெற்றி பெற்றவர் என்றும், இப்போது அந்த ஊர் மக்களுக்கே எதுவும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டும் துரைராஜ் மீது நிலவி வருகிறது. அதேபோல் இவர் மனைவி கட்சிக்கும் அறிமுகம் இல்லாதவர் தொகுதிக்கும் அறிமுகம் இல்லாதவர், இவர்களை நிற்க வைத்தால் திமுகவினரே தோற்கடித்து விடுவார்கள் அவரது கட்சியினரை கூறுகின்றனர்.

 

அதேபோல் கட்சிப்பணிக்காக தனது ஆசிரியர் பதவியை துறந்த, முத்தரையர் சமுகத்தை சேர்ந்த ஆசிரியர், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் மதனாவும் இருக்கிறார். இவர் கடந்த தேர்தலின் போதே மூன்று தொகுதிகளில் சீட் கேட்டு மயிரிழையில் தொகுதியை தவறவிட்டவர். அமைச்சர் நேருவின் தீவிர விசுவாசி என்பதால், பெண்களுக்கு ஒதுக்கப்பட்டால் அமைச்சர் ஆசி இவருக்கு தான். எனவே மதனாவும் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

 

அதிமுக சார்பில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட வளரும் முயன்று வருவதாக கூறப்படுகிறது.

 

அந்த வகையில் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி முதன்மையாக இருந்தாலும், எந்த வகையிலும் ராசி இல்லாதவர் இவர். ஆனால் முத்தரையர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் இவருக்குத்தான் வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்கள்.

 

அதேபோல் முன்னாள் அமைச்சர் வளர்மதியும் இந்த முறை சீட் பெற்றே ஆக வேண்டும் என்ற தொடர் முயற்சியில் இறங்கியிருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி இப்போதோ தொகுதியில் தேர்தல் பணியாற்ற தொடங்குங்கள் என கூறியதாக அவர் தரப்பில் கூறப்படுகிறது.இதனால் மீண்டும் நமக்கு தான் சீட்டு தான் என முன்னாள் அமைச்சர் வளர்மதி நம்பிக்கையுடன் செயல்பட்டு வருகிறார்.

 

அடுத்ததாக புதிய முகம் ஒருவருக்கு தான் இந்த தொகுதி ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் நிலவி வருகிறது அந்த வகையில் புங்கனூர் ஒன்றிய முன்னாள் கவுன்சிலரும்,வடக்கு மாவட்ட மாணவர் அணி செயலாளர் மாணவர்அணி இணை செயலாருமான கார்த்தி.உடையார் சமுதாயத்தை சேர்ந்த இவர் ஒன்றிய கவுன்சிலர் ஆக இருந்தபோது கட்சிப் பணிவுடன் கட்சி பாகுபாடு இன்றி பொதுமக்களுக்காக உழைத்தவர்.இதனால் புங்கனூர் ஊராட்சி மட்டுமின்றி திருச்சி மாவட்டம் முழுவதும் இவருக்கு நல்ல பெயர் உண்டு. சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய ஒரு மாற்று சமுதாய இளைஞரை இந்தத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்தால் ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுகவுக்கு தான் என இப்போதே உறுதி செய்து கொள்ளலாம்.

மேலும் மாணவர் அணி மாவட்ட செயலாளர் அறிவழகன் தீவிரக் கட்சிப் பணியாற்றி வருபவர்.இளைஞர்,அனைவரிடமும் இனிதாக பழகக்கூடிய நல்ல பண்பாளர்.ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் தனக்கும் போட்டியிட விருப்ப மனு அளித்தவர் .இவருக்கும் வாய்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

இதேபோன்று ஒன்றிய செயலாளர் கோப்பு நடராஜ் . முத்தரையர் சமுதாயத்தை சேர்ந்தவர் இவர் 2011 ல் முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு மாற்று வேட்பாளராக இருந்தார். அதேபோல் சென்ற முறையும் கு.ப.கிருஷ்ணனுக்கு அடுத்தபடியாக இவர் பெயர் தான் பலமாக அடிபட்டது. 27 ஆண்டுகாலமாக தீவிர கட்சி பணியாற்றி வருகிறார். இவரும் கட்சி சார்பாக சொந்த செலவில் பல்வேறு நலத்திட்ட பணிகள் மற்றும் ரத்ததான முகாம்கள் ஏற்பாடு செய்து தொகுதி மக்களின் பலத்த அன்பை பெற்றவர். பொதுக்கூட்டம் ஆர்ப்பாட்டம் என்று அந்த பகுதியையே கலக்கி எடுத்தவர். தைரியசாலியான இவருக்கு இந்த முறை கண்டிப்பாக வாய்ப்பு கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.

 

ஸ்ரீரங்கம் தொகுதியை அதிமுக கூட்டணியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சியும் முதல் சாய்ஸாக ஸ்ரீரங்கம் தொகுதியை கேட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த தொகுதியில் பா.ஜ.கவுக்கு கணிசமான வாக்கு வங்கி உள்ளது. வெற்றிவாய்ப்பு அதிகம் உள்ள தொகுதி என்பதால் இந்த தொகுதியை கேட்டு பாஜக பிரமுகர்கள் பலரும் சீட் கேட்டு வருகிறார்கள். அந்த வகையில் பாஜக மாவட்ட தலைவர் ஒண்டி முத்து .இவர் பெரும்பான்மை சமூகமான முத்தரையர் சமூகத்தை சேர்ந்தவர்.திருச்சியில் பாஜக வளர்ச்சியில் ஒரு துளி கூட ஈடுபடாதவர்.இவர் தலைவராக பதவியேற்ற பின் ஆளுங்கட்சியின் குறைகளை எடுத்துக் கூறி இதுவரை ஒரு

ஆர்ப்பாட்டமோ,போராட்டமோ நடத்தியது கிடையாது.இந்த பதவியை வைத்து தனது ரியல் எஸ்டேட் தொழிலை தான் வளர்த்து வருவதாக கூறப்பட்டு வருகிறது.திருச்சியில் இவருக்கு எந்த ஒரு பத்திரிக்கையாளரையும் நேரடியாக தெரியாது எனவும் கூறப்படுகிறது.இவருக்கு சீட்டை கொடுத்து பாஜக தொகுதியை இழக்கக்கூடாது.

 

முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா ஆகிய பிரபலங்கள் இந்த தொகுதியில் போட்டியிடுவதற்காக ஒரு ரகசிய சர்வே எடுத்திருப்பதாகவும் அதன்படி அவர்களில் ஒருவர் நிற்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அடுத்ததாக திமுக கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியும் இப்போதே இந்த தொகுதியை பெறுவதற்கு முயன்று வருகிறார்கள். அந்த வகையில் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் கிஷோர்குமார் என்பவர் சீட் ரேசில் இருக்கிறார். மக்கள் நீதி மய்யம் கட்சி ஆரம்பித்ததில் இருந்தே, தொடர்ந்து கட்சியை வளர்த்து வருவதோடு, எல்லா சமுதாய மக்களின் அன்பையும் பெற்றிருக்கிறார். நல்ல சமூக ஆர்வலரும் கூட, அதேபோல் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் அன்பை பெற்றவரான கிஷோர் குமார் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.

 

இந்த ஸ்ரீரங்கம் தொகுதியில்யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது இன்னும் 3 மாதத்துக்குள் தெரியவரும்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.