Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி கிழக்கு தொகுதி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி : அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது .

0

'- Advertisement -

திருச்சி கிழக்கு தொகுதி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி :

அதிமுக நிர்வாகிகள்

ஆலோசனை கூட்டம்.

முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா,மாவட்டச் செயலாளர் சீனிவாசன் பங்கேற்பு.

திருச்சி கிழக்கு தொகுதி வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்த பணியினை மேற்கொள்வது சம்பந்தமான கிழக்கு தொகுதிக்குட்பட்ட மாவட்ட , பகுதி, வட்ட அணி நிர்வாகிகள் மற்றும் பாக செயலளர்கள், பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் மரக்கடை அருகில்

சந்தன மஹாலில் இன்று திருச்சி மாநகர்

மாவட்ட அதிமுக. செயலாளரும்

முன்னாள் துணை மேயருமான

ஜெ.சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.

 

 

வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்த பணியினை எஸ்.ஐ.ஆர். ஆய்வு பணி மேற்கொள்வதற்காக அறிவிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்கள் கழக அமைப்புச் செயலாளரும்

முன்னாள் அமைச்சருமான

எஸ்.கோகுல இந்திரா,

தஞ்சாவூர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அ.அறிவொளி ஆகியோர் ஆலோசனைகள் வழங்கினர்.

 

பாகக் கிளை நிர்வாகிகளுக்கு பயிற்சி பொறுப்பாளர்கள்

திருச்சி மண்டல தகவல் தொழில் நுட்பப்பிரிவு பொருளாளர்

அறிவு அரவிந்தன், பெரம்பலூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் திருமால்மருகன்,

பெரம்பலூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் சிவலிங்கம்

ஆகியோர் ஆலோசனைகள் வழங்கினர்.

 

 

நிகழ்ச்சியில் கழக அமைப்புச்செயலாளர் டி.ரத்தினவேல் மற்றும் மாநில பேரவை துணைச் செயலாளர் ஜோதிவாணன், முன்னாள் மாவட்ட செயலாளர் கே.சி. பரமசிவம், மாவட்ட இணைச் செயலாளர் ஜாக்குலின், துணைச் செயலாளர் வனிதா, பத்மநாதன், பொருளாளர் ராஜசேகரன். பொதுக்குழு உறுப்பினர்கள் மல்லிகா செல்வராஜ், மாவட்ட அணிச் செயலாளர்கள் இளைஞரணி ரஜினிகாந்த், தொழிற்சங்கம் ராஜேந்திரன், மீனவரணி கவுன்சிலர் அம்பிகாபதி,இலக்கிய அணி பாலாஜி, ஐ.டி.பிரிவு வெங்கட்பிரபு, பீடி பிரிவு சகாபுதீன், ஐ.டி.விங் ராதா வேங்கடநாதன்,

பகுதி செயலாளர்கள் அன்பழகன், ஏர்போர்ட் விஜி, கலிலுல் ரஹ்மான், வாசுதேவன், ரோஜர் ,பேரவை கருமண்டபம் சுரேந்தர், டிபன் கடை கார்த்திகேயன் , டாஸ்மாக் பிளாட்டோ , இளைஞரணி சில்வர் சதீஷ்குமார்,டாக்டர் தமிழரசி சுப்பையா, வழக்கறிஞர் பிரிவு முல்லை சுரேஷ், முத்துமாரி, வரகனேரி சசிக்குமார், மாவட்ட பிரதிநிதி காசிப்பாளையம் சுரேஷ், தர்கா காஜா, ஐ.டி. விங். கதிரவன், புத்தூர் ரமேஷ், ஆசைத்தம்பி மற்றும் வட்டச் செயலாளர்கள் பொன். அகிலாண்டம், ரமணிலால், கல்லுக்குழி முருகன், மலைக்கோட்டை ஜெகதீசன், கட்பீஸ் ரமேஷ், சிங்கமுத்து, அக்பர் அலி கீழக்கரை முஸ்தபா,

வீரன் சந்தோஷ்ராஜ், கே.பி. ராமனாதன், என்.டி. மலையப்பன், பிரித்திவிராஜ், பூக்கடை முத்துக்குமார் மற்றும் அனைத்து வாக்குச்சாவடி பாக முகவர்கள் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.