முசிறியில்
தனக்குத்தானே கழுத்தை அறுத்து முதியவர் தற்கொலை
மனைவி இறந்த துக்கம் தாங்காமல் துயர முடிவு

முசிறி அருகே உள்ள வெள்ளூர் வெள்ளாளர் தெரு பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 60)
இவரது மனைவி கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
அவரது இழப்பு குணசேகரனை பெரிதும் வாட்டியது.
மனைவி மீது அளவற்ற பாசம் கொண்ட அவரால் மனைவியின் இழப்பை தாங்கிக்கொள்ள இயலவில்லை.
இதனால் மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆனால் தொடர்ந்து சில நாட்களாக மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானார் .
பின்னர் யாரும் எதிர்பாராத வகையில் கத்தியால் தனக்குத் தானே கழுத்தை அறுத்துக் கொண்டு மயங்கிடந்தார்
இதனைக் கண்ட உறவினர்கள் அவரை மீட்டு முசிறி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். பின்னர் நடத்தப்பட்ட பரிசோதனையில் கழுத்தை அறுப்பதற்கு முன்பாக பூச்சிக்கொல்லி மருந்தையும் குடித்து இருப்பது தெரிய வந்தது.
பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு டாக்டர்கள் கடந்த நான்கு நாட்களாக தீவிர சிகிச்சை அளித்தனர், இருந்தபோதிலும் சிகிச்சை பலனளிக்காமல் குணசேகரன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரது மகன் பூபாலன் கொடுத்த புகாரின் அடிப்படையில் முசிறி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

