அரசு வழக்கறிஞரின் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மகளை கன்னத்தில் அறைந்த திருச்சி தனியார் பள்ளி ஒருங்கிணைப்பாளர் மீது புகார்.
திருச்சியில் பரபரப்பு சம்பவம்
அரசு வழக்கறிஞரின் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மகளை கன்னத்தில் அறைந்த தனியார் பள்ளி ஒருங்கிணைப்பாளர் மீது
தாய் போலீசில் புகார்.
திருச்சி ஓலையூர் ராகவேந்திராநகர் பகுதியை சேர்ந்தவர்
ஹேமந்த் .இவர் திருச்சி நீதிமன்றத்தில் அரசு கூடுதல் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார்.
இவருடைய மகள் திருச்சி உடையான்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில்
1ம் வகுப்பு படித்து வருகிறார்.இந்த நிலையில் சம்பவத்தன்று காலை பள்ளிக்குச் சென்ற சிறுமியை பள்ளி நிர்வாகத்தின் ஒருங்கிணைப்பாளர் திடீரென்று இடது கன்னத்தில் அறைந்து விட்டதாக சிறுமி விட்டிற்கு வந்து பெற்றோரிடம் அழுது கொண்டு தெரிவித்து உள்ளார்.
இதையடுத்து சிறுமியின் தாய் சோபியா விமலி ஏர்போர்ட் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகார் மனுவில் தன்னுடைய மகளை கன்னத்தில் அறைந்து காயம் ஏற்படுத்திய தனியார் பள்ளி ஒருங்கிணைப்பாளர், மற்றும் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளார். இதையடுத்து ஏர்போர்ட் காவல் நிலைய போலீசார் தனியார் பள்ளி ஒருங்கிணைப்பாளர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

