தென் தமிழகத்திலேயே முதல் முறையாக பிறந்து சில நாட்களே ஆன 2 பெண் குழந்தைகளுக்கு ஆஞ்சியோகிராபி சிகிச்சை செய்து திருச்சி மா காவேரி மருத்துவமனை சாதனை
இதய நோயால் பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தைகளுக்கு ஆஞ்சியோ சிகிச்சை
மா காவேரி மருத்துவமனை
டாக்டர்கள் சாதனை
காவேரி மருத்துவமனை நிர்வாக இயக்குனரும், மூத்த இதய நோய் மருத்துவருமான டாக்டர் டி.செங்குட்டுவன் நிருபர்களிடம் கூறியதாவது;-
தென் தமிழகத்திலேயே முதல் முறையாக

பிறந்து சில நாட்களே ஆன 2 பெண் குழந்தைகளுக்கு ஆஞ்சியோகிராபி சிகிச்சை செய்து குழந்தைகளுக்கு முழுமையான தீர்வு அளித்துள்ளோம். பிறந்து இரண்டு மணி நேரமே ஆன 2 கிலோ எடையுள்ள பெண் குழந்தையின் இதய வால்வு மிக சுருங்கிய நிலையில் இருந்தது. இதனால் அக்குழந்தை தீவிர இருதய நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தது. அதேபோல பிறந்து 11 நாட்களே ஆன குறை பிரசவத்தில் பிறந்த பெண் குழந்தை ஒன்றுக்கு இதய ரத்த ஓட்ட பாதிப்பும் இருந்தது. இந்த இரண்டு பச்சிளம் குழந்தைகளும் சிகிச்சைக்காக மா காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அந்த பரிசோதித்த இதயவியல் மருத்துவ நிபுணர்களான டாக்டர் எஸ்.மணிராம் மற்றும் டாக்டர் எஸ். பி.வினோத்குமார் ஆகியோர், அக்குழந்தைகளின் இதய நோய் பாதிப்புகளை கண்டறிந்தனர். அதன்படி, பிறந்து 48 மணி நேரமே ஆன குழந்தைக்கு இதயத்திலிருந்து நுரையீரலுக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் வால்வு சுருங்கி இருந்தது தெரிய வந்தது. சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கவில்லை என்றால் குழந்தையின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் இக்கட்டான சூழ்நிலை உருவானது. இதன் தீவிரத்தை உணர்ந்த மருத்துவக்குழு பலூன் வால்வோ பிளாஸ்டி எனப்படும் சிகிச்சை அளிக்க முடிவு செய்தது. அதன்படி, ஒரு சிறிய பலூன் தொடையில் உள்ள ரத்த குழாய் வழியாக செலுத்தப்பட்டு, குழந்தையின் சுருங்கிய இதய வால்வு விரிவாக்கப்பட்டது.
தீவிர மருத்துவ கண்காணிப்பிற்கு பிறகு தற்போது குழந்தை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது. மற்றொரு குழந்தைக்கு, இதய சுவாச பிரச்சனை இருப்பது தெரிய வந்தது. செயற்கை சுவாசத்தின் மூலமே அக்குழந்தை உயிர் வாழும் சூழல் ஏற்பட்டது. எனவே அக்குழந்தைக்கு இதயத்தில் இருந்த ரத்த நாள அடைப்பு பிரச்சனையை சரி செய்ய ” பி. டி.ஏ ” எனப்படும் மருத்துவ சிகிச்சை அளிக்க முடிவு செய்தோம். அதன்படி 2 மில்லி மீட்டர் அளவுள்ள ஒரு சிறிய மருத்துவ சாதனத்தை பயன்படுத்தி அக்குழந்தையின் இதய நோய் பாதிப்பை சரி செய்தோம். இரண்டு நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் இருந்த அக்குழந்தை, பிறகு நல்ல முறையில் குண மடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது என்றார்.
இந்த பேட்டியின் போது இதய நோய் டாக்டர்கள் மணிராம் கிருஷ்ணா,
வினோத் குமார் ,திருச்சி காவேரி மருத்துவமனையின் பொது மேலாளரான ஏ. மாதவன், டாக்டர்கள் கே.செந்தில்குமார், ஜி.பிரவீன்குமார், டி.செந்தில்குமார்ஆகியோர் உடன் இருந்தனர்.