மாதாந்திர மின் பராமரிப்பு பணிக்காக இன்று 17.05.25 சனிக்கிழமை பல்வேறு மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது .
இதன் காரணமாக இன்று பின்வரும் இடங்களில் பகல்நேர மின் தடை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .
எனவே, சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மின் தடை பகுதிகள் விபரம்:
திருச்சி நகர் இபி ரோடு வெல்லமண்டி மின் பாதையை சேர்ந்த மண்டபச்சாலை, காந்தி மார்க்கெட், கல்மந்தை, ராணி தெரு, பூலோக நகர், கோயில் தெரு, பெரிய சௌராஷ்ட்ரா தெரு, ஜின்னா தெரு, கிருஷ்ணாபுரம்,வாழைக்காய் மண்டி,பெரிய கடை வீதி ஆர்ச் முதல் பிஜி நாயுடு வரை, ரங்கசாமி தெரு, நடுவழயல்கார தெரு, ஆகிய பகுதிகள். மேற்கண்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது…
அதேபோல கல்லக்குடி பகுதியில் கல்லக்குடி, வடுகர்பேட்டை, பளிங்காநத்தம், மேலரசூர், மால்வாய், சரடமங்கலம், எம்.கண்ணனூர், ஒரத்தூர், சாத்தப்பாடி, சிலுவைப்பட்டி, ஆமரசூர், தாப்பாய், வரகுப்பை, சிறுகளப்பூர், அழுந்தலைப்பூர், கருடமங்கலம், வந்தலை கூடலூர், சிறுவயலூர், காணக்கிளியநல்லூர், பெருவளப்பூர், வி.சி.புரம், கோவண்டாக்குறிச்சி, புதூர்பாளையம், ஆலம்பாக்கம், விரகாலூர், ஆ.மேட்டூர், நத்தம், திருமாங்குடி, டி.கல்விக்குடி, ஆலங்குடிமகாஜனம், செம்பரை, திண்ணியம், அரியூர், கல்லகம், கீழரசூர் மற்றும் புள்ளம்பாடி ஆகிய இடங்கள்.மேற்கண்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரிய அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .