திருச்சியில் டன் கணக்கில் அரிசி கடத்திய நபரை நேற்று போலீசார் கைது செய்து உள்ளனர் .
திருச்சி குடிமை பொருள் வழங்கல் உற்ற குற்ற புலனாய்வு பிரிவு துறை காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவி உத்தரவின் பேரில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் வின்சென்ட் மேற்பாா்வையில் காவல் உதவி ஆய்வாளா் தலைமையிலான தனிப்படையினா் அரியமங்கலம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை

அப்போது, அரியமங்கலம் தங்கேஸ்வரி நகா் தெற்கு தெருவில் குடியிருக்கும் க. தினேஷ்குமாா் (வயது 20) என்பவா் இரவு நேர டிபன் கடைக்காகவும், மாட்டுத்தீவனத்துக்கும் தனது வீட்டின் திண்ணையிலும், தனது ஆம்னி வாகனத்திலும் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து தினேஷ் குமாரை கைது செய்த போலீஸாா், 22 சாக்கு மூட்டைகளில் பதுக்கி அவா் பதுக்கி வைத்திருந்த சுமாா் 1100 கிலோ பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசியையும், அரிசி கடத்த பயன்படுத்திய ஆம்னி வேனையும் கைப்பற்றினா். தொடா்ந்து, தினேஷ்குமாரை நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்து உள்ளனர்.