Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி ஜி-கார்னர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவர். மீது லாரி மோதி பரிதாப பலி

0

'- Advertisement -

திருச்சியில் லாரி மோதி முதியவர் பரிதாப சாவு

 

Ad banner
TVK ad

திருச்சி சுப்பிரமணியபுரம் ஜெய்லானி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சிராஜுதீன் (வயது 72) இவர் நேற்று தனது இரு சக்கர வாகனத்தில் டிவிஎஸ் டோல்கேடில் இருந்து ஜி கார்னர் நோக்கி சென்று கொண்டு இருந்தார். அப்பொழுது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாரத விதமாக சிராஜுதீன் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் சிராஜுதீன் தலையில் பலத்த காயம் அடைந்து ஆபத்தான நிலையில் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த சிராஜுதீன் சில மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கண்டோன்மென்ட் தெற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.