Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பாமக மத்திய மாவட்ட அமைப்பு தலைவரின் பேக்கரி மற்றும் பிரபல டீக்கடையில் பூட்டை உடைத்து திருட்டு .

0

'- Advertisement -

திருச்சி உறையூரில் பாமக நிர்வாகி பேக்கரியை உடைத்து ஒரு லட்சம் பணம் பொருட்கள் கொள்ளை

 

Ad banner

மர்ம நபர்களுக்கு போலீசார் வலை .

 

திருச்சி உறையூர் வெக்காளியம்மன் நகரை சேர்ந்தவர் ஆர்.கே. வினோத்.திருச்சி மத்திய மாவட்ட பாமக அமைப்பு தலைவர்.இவர் திருச்சி உறையூர் சிஎஸ்ஐ மருத்துவமனை மெத்தடிஸ்ட் மேல்நிலைப் பள்ளி அருகில் பேக்கரி மற்றும் ஸ்வீட் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார்..இன்று காலையில் வினோத் மற்றும் ஊழியர்கள் கடையை திறக்க வரும்போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. -கடையில் ஷட்டர் கதவுகளை உள்ள பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.உள்ளே சென்று பார்த்தபோது ஒரு லட்சம் பணம் மற்றும் பொருள்கள் கொள்ளை போயிருந்தது தெரியவந்துள்ளது .

இது குறித்து திருச்சி மத்திய மாவட்ட பாமக செயலாளர் உமாநாத், மாவட்ட அமைப்பு தலைவர் வினோத் மற்றும் நிர்வாகிகள் உறையூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்கள் சோதனை நடத்தினர்.இதுகுறித்து உறையூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து பழைய குற்றவாளிகள் பட்டியலை எடுத்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உறையூர் மெயின் ரோட்டில் எப்போதும் மக்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் நடந்த இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இதே போன்ற டீக்கடையில் கொள்ளை:

 

இதேபோல் திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் அலிப் டீக்கடையில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து சென்று விட்டனர்

இதுகுறித்து கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.