ஸ்ரீரங்கத்தில்
பெண்ணிடம் நூதன முறையில் நகை பறித்த ரெண்டு பேர் கைது .
கார்,செல்போன் பறிமுதல்.
திருச்சி திருவானைக்காவல் பகுதியைச் சேர்ந்தவர் சரஸ்வதி.
இவர் கடந்த மார்ச் 11ம் தேதி திருவானைக்காவல் மெயின் ரோடு பகுதியில் நடந்து சென்றார். அப்போது ஒரு கும்பல் காரில் அவர் அருகாமையில் வந்து இறங்கினர். பின்னர் அந்தப் பெண்மணியிடம் தங்க நகை அணிந்து கொண்டு சாலையில் தனியாக நடந்து போகலாமா? பாதுகாப்பு இல்லாத இடத்தில் தனியாக உள்ளீர்களே என பலவாறு பேச்சு கொடுத்து, அப் பெண்மணியை
நூதன முறையில் ஏமாற்றி அவர் அணிந்திருந்த 7 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.
இது தொடர்பாக ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து
சென்னையைச் சேர்ந்த சதீஷ், ரமேஷ் ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் இந்த தொடர்புடைய இரண்டு பேரை தேடி வருகின்றனர்.
மேலும் அவர்கள் வந்த கார் மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது .

