Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்ற சனீஸ்வரர் கோயில் பெண் செயல் அலுவலர் அதிரடி கைது.

0

'- Advertisement -

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோயிலில் லஞ்சம் வாங்கியதாகக் கூறப்படும் செயல் அலுவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Ad banner

இக்கோயிலில் செயல் அலுவலராக ஜோதி என்பவர் பணியாற்றி வருகிறார். அதே கோயிலில் எழுத்தராக 2015 ஆம் ஆண்டு பதவி உயர்வு பெற்ற சசிகுமார் என்பவரும் பணியாற்றி வருகிறார்.

 

ஆனால், பல ஆண்டுகள் கழிந்தும் அவருக்கு சம்பள உயர்வு வழங்கப்படாமல் இருந்தது.

 

TVK ad

இந்த நிலையில், ஊதிய உயர்வுக்காக ஒருலட்சம் ரூபாயை லஞ்சமாக தருமாறு ஜோதி கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சசிகுமார், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் பதிவு செய்தார்.

 

அதன் பேரில், சசிகுமார் மன்னார்குடி ஆனந்த விநாயகர் கோயிலில் வைத்து ரசாயனம் பூசப்பட்ட பணத்தை ஜோதிக்கு வழங்கினார்.

 

அப்போது அங்கு மறைந்து காத்திருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி நந்தகோபால் தலைமையிலான போலீசார், செயல் அலுவலர் ஜோதியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். இவர் மீதான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் கோயில் ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.