Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நாளை நடைபெற உள்ள ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்ச்சியில் அனைவரும் திரளாக பங்கேற்க திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் அழைப்பு.

0

'- Advertisement -

Ad banner

திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் முன்னாள் துணை மேயர் ஜெ. சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க

 

TVK ad

கட்சிக்காகவும் , தமிழ்நாட்டு மக்களுக்காகவும் தன்னையே அர்ப்பணித்து தவ வாழ்வு வாழ்ந்திட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 77வது பிறந்த நாளான நாளை 24.2.2025, திங்கட்கிழமை அன்று அம்மா அவர்களைப் பற்றிய நினைவுகளை நெஞ்சில் சுமந்துள்ள கட்சியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் உடன்பிறப்புகள் அனைவரும் மன ஆறுதல் பெறும் வகையில் அனைத்து பகுதிகளிலும் ஆங்காங்கே ஜெயலலிதா அவர்களின் திருஉருவப் படங்களை வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

நாளை காலை 10 மணி அளவில் திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலை அருகே முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கப்பட உள்ளது .

 

அதுசமயம் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், வட்ட, கிளை, வார்டு நிர்வாகிகள் மற்றும் முன்னாள், இன்னாள் கவுன்சிலர்கள், செயல்வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள் மற்றும் மகளிரணியினர் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறன் என மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் வெளியீட்டு உள்ள அறிக்கையில் கூறியுள்ளார் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.