இந்து திருக்கோயில் மீட்பு இயக்கம் சார்பில் கழுதைக்காதில் சங்கு ஊதும் போராட்டம் அறிவிப்பு எதிரொலி …. உடனடியாக பதிலளித்த துறைக்கு நிறுவனர் நன்றி . மேலும் …..

செயல்படாத இந்து சமய அறநிலைத்துறையை வருகின்ற 15ஆம் தேதி சென்னை காமராஜர் சாலையில் கழுதைகள் காதில் சங்கு ஊதும் போராட்டம் நடைபெறும் என கடந்த பத்தாம் தேதி மின்இதழில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது …
இதன் எதிரொலியாக இன்று இந்து சமய அறநிலைத்துறை சார்பில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்து உள்ளனர்.
இதுகுறித்து இந்து திருக்கோயில் மீட்பு இயக்க நிறுவனரும் வழக்கறிஞருமான மகேஸ்வரி வையாபுரி அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
எங்களது கோரிக்கையை குறித்து எழுத்துப்பூர்வ தகவல் தெரிவித்தமைக்கு முதலில் எங்கள் இயக்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.



எங்களது போராட்டம் நியாயமான போராட்டமாக இருப்பதன் காரணத்தினால் முதல் கட்டமாக இணை ஆணையர் அவர்கள் நேரில் எங்கள் இயக்கத்தை சார்ந்தவர்களை அழைத்து பேசுவதற்கு ஏற்பாடு செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
எங்களது கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு சென்றடைவதற்காக இணை ஆணையர் அவர்கள் அழைத்து பேசுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. ஆகவே எங்களது இயக்கத்தை உங்களது தலைமையில் அழைத்து பேசுவதற்கு அழைக்கும் படி இந்த நேரத்தில் கேட்டுக்கொள்கிறோம். அப்போதுதான் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு ஏற்படும் எழுத்துப்பூர்வமாக இதுபோல் இந்து சமய அறநிலையத்துறை கொடுத்துள்ளது. ஆகவே நேரடி பேச்சு வார்த்தைக்கு அழைத்தால் ஒரு சுமூகமான தீர்வு ஏற்படும் என்கின்ற நல்ல எண்ணத்தில் இந்த தகவலை இதன் மூலம் தெரிவித்து கொள்கிறோம் என இந்து சமய திருக்கோயில் மீட்பு நிறுவனரும் வழக்கறிஞருமான திருச்சி மகேஸ்வரி வையாபுரி கூறியுள்ளார்

