Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஆள் இல்லாத வீட்டின் பூட்டை உடைத்ததாக சமயபுரம் பெண் எஸ்ஐ மீது புகார்.

0

 

திருச்சி மாவட்டம், சமயபுரத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ், (வயது 45) இவரது மனைவி ஸ்ரீஜா, 32. தம்பதி இடையே அடிக்கடி குடும்ப சண்டை இருந்துள்ளது.

இதனால் கோபித்துக் கொண்டு தாய் வீடு சென்ற ஸ்ரீஜா, திரும்பி வரும் போது கழுத்தில் தாலி இல்லாமல் வந்துள்ளார். இதையடுத்து, கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பிரகாஷ் வேலைக்கு சென்று விட்டார். கணவன் சண்டையிட்டது குறித்து, சமயபுரம் போலீசில் ஸ்ரீஜா புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் எஸ்.ஐ., கவிதா, பிரகாஷ் வீட்டுக்கு, நேற்று முன்தினம் இரவு ஸ்ரீஜாவை அழைத்து சென்றுள்ளார்.

வீட்டின் கதவு பூட்டியிருந்தது. பூட்டை உடைத்து கதவை திறந்து உள்ளார்.
அக்கம்பக்கத்தினர், ‘ஆள் இல்லாத வீட்டின் பூட்டை உடைக்கிறீர்களே?’ என்று கேட்டதற்கு, அவர்களை தரக்குறைவாக பேசியதோடு, பிரகாசையும் தரக்குறைவாக, பேசியுள்ளார். வீட்டை திறந்த கவிதா, அங்கு ஸ்ரீஜாவை விட்டு சென்றார்.

இது குறித்து பிரகாஷ் கூறுகையில், ”என் மனைவி புகார் கொடுத்துள்ளார். என்னை அழைத்து விசாரிக்காமல், பூட்டை உடைத்து கதவை திறந்துள்ளார்.

இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்க உள்ளேன்,” என கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.