Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாவட்ட தளபதி விஜய் ரசிகர்கள் வீடு வீடாக சென்று விஜயின் கொள்கைகளை விளக்கி கூறி 2026ல் முதலமைச்சர் ஆக்குவது என ஆர்.கே.ராஜா தலைமையில் சபதம் ஏற்றனர்.

0

 

திருச்சி மாவட்ட தளபதி விஜய் ரசிகர்களுக்கு திருச்சி பாலக்கரை அலுவலகத்தில் நேற்று 2025 ஆம் ஆண்டு தினசரி நாட்காட்டி வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் வருகிற 2026 ஆம் ஆண்டு தளபதி விஜய் அண்ணா அவர்களை தமிழக முதலமைச்சர் சிம்மாசனத்தில் அமர்த்துவது என்ற ஒரு சபதத்தை ஏற்று ஒவ்வொரு வீடு சென்று பொதுமக்களிடம் தளபதியின் தீர்மானங்கள் மற்றும் கொள்கைகளை விளக்கி எதிர்காலத்தில் ஒரு தூய்மையான நல்லாட்சியை தருவார் என்று விளக்க இருப்பதாக அனைவரும் சபதம் ஏற்றனர்.

இந்த நிகழ்ச்சி திருச்சி ஆர் .கே.ராஜா தலைமையில் தலைமையில் நடைபெற்றது.

 

மேலும் இந்த நிகழ்வில் ஜீவா , லால்குடி கலைவாணன் , உறையூர் சரண்ராஜ் , மணப்பாறை மணிகண்டன் , நடேஷ் குமார் , பெரிய மிளகு பாறை சுப்பிரமணி , தொட்டியம் பாரதிராஜா , மண்ணச்சநல்லூர் சுரேஷ்குமார் , சமயபுரம் சதீஷ்குமார் , மகளிர் அணி ஈபி ரோடு சசிரேகா , காயத்ரி , அரியமங்கலம் ஆசிப் , லால்குடி லோகநாதன் , ரமேஷ் , சூர்யா , உறையூர் மூர்த்தி பிரதர்ஸ் ,புத்தூர் நடராஜன் , மகேந்திரன் , மலைக்கோட்டை நசீர் , தொட்டியம் கார்த்திகேயன் , மணிகண்டம் ராஜ்குமார் , ஈபி ரோடு கரிகாலன் , புத்தூர் பாபு , தொட்டியம் சுஜன் , உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.