நாளை மது கடையை மூடக்கோரி மாபெரும் உண்ணாவிரதப் போராட்டதில் பொதுமக்கள் அனைவரும் திரளாக பங்கேற்க கோரி திருச்சி அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் அழைப்பு
திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
உறையூர் லிங்க நகர் பகுதியில் கடந்த 2012 ஆம் ஆண்டு மக்கள் போராட்டத்தால் மூடப்பட்ட மது கடை மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால், மதுக்கடையை மீண்டும் மூடுவது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கடந்த 09/09/24 அன்று மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தினால், மக்கள் படும் துயரங்களை சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்தும் வகையில், நாளை (01-10-2024) காலை, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தினகரனின் ஆணைக்கிணங்க, உறையூர் பகுதி செயலாளர் கல்நாயக் சதீஸ்குமார் தலைமையில் லிங்கநகர் வாழ் பொதுமக்கள் சார்பாக, லிங்கநகர் மதுபான கடை அருகே ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்த போகின்றோம்.
நமது திருச்சியின் நலன் மீது அக்கறை கொண்ட சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், தாய்மார்கள் மற்றும் நிர்வாகிகள், இவ் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்புகளை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோன் என திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் செந்தில்நாதன் தெரிவித்துள்ளார்.