Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் ஆலோசனை கூட்டம் .

0

'- Advertisement -

Ad banner

அஇஅதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் ஆணைக்கிணங்க

இன்று (29.9.24, ஞாயிற்றுக்கிழமை) காலை திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அதிமுக அமைப்புச் செயலாளர்கள் எஸ்.வளர்மதி, ஆர்.மனோகரன், எம்ஜிஆர் இளைஞர் செயலாளர் என்.ஆர்.சிவபதி, முன்னாள் அமைச்சர் டி.பி.பூனாட்சி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இந்திராகாந்தி, பரமேஸ்வரி முருகன், எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் பொன்‌.செல்வராஜ், மாணவரணி மாவட்ட செயலாளர் அறிவழகன் ,

மாவட்ட துணை செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட பொருளாளர் சேவியர், புங்கனூர் ஒன்றிய கவுன்சிலர் கார்த்திக் , தேவா, மற்றும் மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், நகர, ஒன்றிய, பேரூராட்சி மற்றும் பகுதி செயலாளர்கள் அனைவரும் திரளக கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.