அதிமுக அரசின் சாதனைகளையும், வாக்குறுதிகளையும் எடுத்து கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் திருச்சி திருவெறும்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் குமார்.
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, திருவெறும்பூர் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட காருண்யா நகர், பொன்னேரிபுரம், கொட்டப்பட்டு, மலையடிவாரம், கல்கண்டா கோட்டை பகுதிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் குமார்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் முதலமைச்சர், அவர்களின் நல்லாசி பெற்ற
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் ப.குமார் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க கோரி இளந்தோறும் சென்று பொதுமக்களை சந்தித்து அதிமுக ஆட்சிக்காலத்தின் சாதனைகளையும் தற்போது பொது செயலாளர் அறிவித்துள்ள வாக்குறுதிகளையும் எடுத்துக் கூறி இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இந்த பிரச்சாரத்தின் போது திமுக நிர்வாகிகள் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சேர்ந்த நிர்வாகிகள்,மாவட்ட கழக நிர்வாகிகள், கிளை செயலாளர்கள் பகுதி கழக செயலாளர்கள், வட்ட கழக செயலாளர்கள் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

