யாதவர்களுக்கு 6 தொகுதிகள் வழங்கிய எடப்பாடி கே.பழனிசாமிக்குதமிழ் மாநில யாதவ மகாசபையின் நிறுவனர் திருவேங்கடம் யாதவ் திருச்சி மாநகர செயலாளர் சீனிவாசனுடன் சென்று நேரில் நன்றி
யாதவர்களுக்கு 6 தொகுதிகள் வழங்கிய எடப்பாடி கே.பழனிசாமிக்குஎம்.திருவேங்கடம் யாதவ் நேரில் நன்றி

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை தாங்குபவரும் அ.தி.மு.க பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமியை தமிழ் மாநில யாதவ மகாசபையின் நிறுவனர் ஸ்ரீரங்கம் எம்.திருவேங்கடம் யாதவ் இயக்க நிர்வாகிகளுடன் சந்தித்தார்
அப்போது,நடைபெற உள்ள 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அ.தி.மு.க.வில் 6 யாதவர்களுக்கு வாய்ப்பு வழங்கியமைக்காக எடப்பாடி கே.பழனிசாமிக்கு திருவேங்கடம் யாதவ் பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்ததோடு அதிமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்கு முழுமையாக பாடுபடுவோம் என உறுதியளித்தார்
இந்நிகழ்வின்போது முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்,திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் துணைமேயருமான ஜெ.சீனிவாசன், ,தமிழ் மாநில யாதவ மகாசபை மாநில இளைஞரணி தலைவர் விஜய் கிருஷ்ணா யாதவ், ஒருங்கிணைப்பாளர் எடத்தெரு பார்த்தசாரதி, மாணவரணி லஷ்மிகாந்தன் உள்பட பலர் உடனிருந்தனர்

